இந்தியாவில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் பெண் பொலிஸ் உட்பட 140 பெண்களுடன் கள்ளத்தொடர்பு  வைத்திருந்தது  தெரிய வந்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி நகரை சேர்ந்தவர் ரமேஷ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் ஒரே சமயத்தில் பெண் பொலிஸ் அதிகாரி உள்பட 140 பெண்களுடன் கள்ளத்தொடர்பு  வைத்துள்ளார்.

ரமேஷ் 140 பெண்களுடன் உல்லாசமாக இருந்தது குறித்து அவரது மகள் ரோஷனிக்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியும், கோபமும் அடைந்த ரோஷினி  பொலிஸ் நிலையத்திற்கு சென்று தந்தை மீது முறைபாடு அளித்துள்ளார்.

ரமேஷ் தனது கள்ளக்காதலிகளின் பெயர்களை ஒரு டயரியில் எழுதி அதை யாருக்கும் தெரியாமல் வீட்டில் பத்திரமாக மறைத்து வைத்துள்ளார். அந்த டயரியை ரோஷினி கண்டுபிடித்துவிட்டார்.

டயரியில் கள்ளக்காதலிகளின் பெயர்கள் மட்டும் அல்ல அவர்களை எந்த திகதியில் எந்த இடத்தில் பார்த்தார், எத்தனை முறை அவர்களுடன் உறவு கொண்டார் உள்ளிட்ட பல விபரங்களையும் ரமேஷ் எழுதி வைத்துள்ளதாக அவரின் மகள் தெரிவித்துள்ளார்.