மக்கள் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றுவேன் - பைடன் 

Published By: R. Kalaichelvan

08 Nov, 2020 | 09:50 AM
image

எவரையும் கைவிடாத அமெரிக்காவை நாம் உருவாக்கப் போகின்றோம். ஒட்டுமொத்த அமெரிக்காவும் அநீதிக்கு எதிராக நின்றுள்ளது என அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஜோ பைடன் தெரிவித்தார்.

தனது ஆதரவாளர்கள் மத்தியில் வெற்றி உரையாற்றிய போது ஜோ பைடன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அனைத்து அமெரிக்காவும் அநீதிக்கு எதிராக நின்றுள்ளது. அமெரிக்காவை மீட்டெடுப்பதற்கான நேரம் இது.  

என்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுவேன். நாட்டு மக்கள் வெற்றி மூலம் தங்கள் குரலை வெளிப்படுத்தியிருக்கின்றனர். 

இதைவிட சிறந்த நாள் வருமென்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். உலக அரங்கில் அமெரிக்காவின் மரியாதையை உயர்த்த உழைப்போம்.

கடந்த 4 ஆண்டுகளாக சமத்துவம், சம உரிமைக்காக நாம் போராடி வந்தோம். கொரோனா காலத்திலும் கட்சிக்காகவும் வெற்றிக்காகவும் உழைத்தவர்களுக்கு நன்றி.

ஆட்சி ஏற்றவுடன் நமது திட்டங்கள் அனைத்தும் அறிவியல் பூர்வமாக இருக்கும். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கே முன்னுரிமை. 

அமெரிக்காவில் ஒவ்வொருவரின் பாதுகாப்பே எனது இலக்கு. எந்த பேதமும் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் நம்மை ஆதரித்து இருக்கிறார்கள். வாய்ப்புகள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும். பாராளுமன்றத்தில் அனைவரும் ஒன்றிணைந்து ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். 

நம்மால்  முடியும் என்ற முழக்கத்துடன் ஒபாமா ஆட்சிக்கு வந்தார். அவருடன் நான் இருந்தேன். யாரையும் கைவிடாத அமெரிக்காவை நாம் உருவாக்க போகின்றோம். அனைத்து அமெரிக்கர்களுக்குமான ஜனாதிபதியாக இருப்பேன் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஜோ பைடனின் உரையை கேட்பதற்கு 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52