வெற்றி உரையில் தாயை நினைவு கூர்ந்த கமலா ஹாரிஸ் ஜனநாயகம் ஒரு செயல் என்கிறார் !

Published By: R. Kalaichelvan

08 Nov, 2020 | 09:44 AM
image

அமெரிக்காவின் துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கமலா ஹாரிஸ், என்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அமெரிக்க மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள கமலா ஹாரிஸ் டெலவர் நகரில் மக்களிடம் உரையாற்றினார். 

இதன் போது மேலும் தெரிவித்த கமலா ஹாரிஸ்,

என்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அமெரிக்க மக்களுக்கு  நன்றி. வெற்றிக்கு உழைத்த மற்றும் வாக்களித்து ஜனநாயகத்தைக் காப்பாற்றிய அமெரிக்க மக்களுக்கு நன்றி.

மக்கள் எமக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளனர் சிறந்த எதிர்காலத்திற்காக. இது அமெரிக்காவுக்கு புதிய நாள்.

ஜனநாயகத்தை உருவாக்க உழைத்த அனைவருக்கும் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். மக்களின் குரலுக்கு தெளிவான பதில் கிடைத்துள்ளது. அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஜோ பைடனை தெரிவு செய்துள்ளீர்கள்.

நம்பிக்கையுடன் அமெரிக்கா வந்த எனது தாயை இந்த வெற்றி தருணத்தில் நினைவு கூருகின்றேன்.

ஜனநாயகம் என்பது ஒரு நிலை அல்ல. அது ஒரு செயல்.

துணை ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள நான் முதல் பெண் தான், கடைசி பெண் அல்ல. இது தொடக்கம் தான். ஒரு பெண்ணை துணை ஜனாதிபதியாக தெரிவு செய்யும் துணிச்சல் பைடனுக்கு இருந்திருக்கிறது.

நமது நாட்டின் பெண்களுக்கு நிறைய சாத்தியங்கள் உருவாக காத்திருக்கின்றன. கடந்த 4 ஆண்டாக சமத்துவம், சம உரிமைக்காக நாம் போராடி வந்தோம். இன வெறியை அகற்றுவோம் என உறுதிபடக் கூறுகிறேன்.

பைடனுக்கு வாக்களித்ததன் மூலம்  நம்பிக்கை, கண்ணியம், ஒற்றுமைக்கு வாக்களித்துள்ளீர்கள் என தெரிவித்துள்ளார்

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள கமலா ஹாரிஸின் உரையை கேட்பதற்கு

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10