மட்டக்களப்பு முக்கொலை : சந்தேக நபரிடம் 48 மணித்தியால விசாரணைக்கு உத்தரவு

Published By: MD.Lucias

25 Jul, 2016 | 03:14 PM
image

மட்டக்களப்பு, வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  காக்காச்சிவட்டையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற முக்கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை 48 மணித்தியாலயம் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

காக்காச்சிவட்டையில்  நேற்று முன்தினம் இரவு விஜிதா (24 வயது) அவருடைய மகள் மற்றும் விஜிதாவின் தந்தை ஆகியோர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். 

இக்கொலை தொடர்பில் விஜிதாவின் கணவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

இவரை 48 மணித்தியாலம் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை செய்வதற்கு களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற  நீதிபதி எஸ்.றிஸ்வி அனுமதி வழங்கியுள்ளார்.

-----------------------

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் வெட்டி படுகொலை : மட்டக்களப்பு வெல்லாவெளியில் அகோரம் 

மட்­டக்­க­ளப்பு வெல்­லா­வெளிப் பொலிஸ் பிரி­வி­லுள்ள காக்­காச்­சி­வெட்­டையில் பச்­சிளம் குழந்தை உட்­பட  ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த மூவர் கடந்த சனிக்­

கி­ழமை இரவு வெட்டி கொலை செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இதில் பச்­சிளம் குழந்­தை­யான லக்­சிகா அவ­ரது தாயான விஜித்தா மற்றும் விஜித்­தாவின் தந்தை ஆகிய மூவரே கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தாக

வெல்­லா­வெளி பொலிஸார் தெரி­வித்­தனர்.

மனை­வியும் குழந்­தையும் வீட்டில் உறங்கிக் கொண்­டி­ருந்த வேளையில் சனிக்­கி­ழமை நள்­ளி­ரவு வீட்­டிற்குள் புகுந்த விஜித்­தாவின் கண­வ­ரான எம்.பிரசாந் (வயது 34) விஜித்­தா­வை­யும (வயது 24) அவ­ரது ஒன்­றரை வயதுக் குழந்­தை­யையும் வெட்டிக் கொலை செய்து வீட்டுக் கிணற்­றுக்குள் வீசி­யுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

இந்த நேரம் அயல் வீட்டில் உறங்கிக் கொண்­டி­ருந்த விஜித்­தாவின் தந்­தை­யான 56 வய­து­டை­ய ­கந்­தையா பேரின்பம் தனது மகள் விஜித்­தா­வி­னதும் பேரக்­கு­ழந்­தை­யான லக்­சி­கா­வி­னதும் அழும் சத்தம் கேட்டு அங்கு ஓடி­வந்த போது கொலை­யா­ளி­யான தனது மரு­மகன் பிரசாந்த் மாமனார் கந்­தை­யா­வையும் தாக்­கி­யுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

வெட்­டு­கா­யங்­க­ளுக்கு உள்­ளான விஜித்­தாவின் தந்தை பேரின்பம் களு­வாஞ்­சிக்­குடி ஆதார வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு சென்று பின்னர் மேல­திக சிகிச்­சைக்­காக மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்­பப்­பட்­ட­போது சிகிச்சை பல­னின்றி ஞாயிற்­றுக்­கி­ழமை காலை உயி­ரி­ழந்­துள்ளார். சம்­பவம் இடம்­பெற்ற வீட்­டுக்குச் சென்ற களு­வாஞ்­சி­குடி சுற்­றுலா நீதி­மன்ற நீதி­பதி எம்.ஐ.றிஸ்வி ஸ்த்தளத்தில் விசா­ர­ணை­களை மேற் கொண்டார்.

இந்த கொலைச்­சம்­பவம் தொடர்பில் விசா­ரணை செய்­து­வரும் வெல்லா வெ ளி பொலிஸார் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய தாக கூறப்­படும் கொலை செய்­யப்­பட்­டுள்ள விஜி­தாவின் கண­வ­ரான எம்.பிரசாந் என்­ப­வரை சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­துள்­ளனர். சந்­தேக நபர் நகாக்­காச்­சி­வெட்டைக் கிரா­மத்தில் மறைந்­தி­ருந்­த­போது ஞாயிற்­றுக்­கி­ழமை காலை அவரை சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­துள்­ளனர்.

 சந்­தேக நப­ரிடம் விசா­ர­ணைகள் மேற் கொள்­ளப்­பட்டு வரு­வ­தா­கவும் பொலிசார் குறிப்­பிட்­டனர். கொலை செய்­யப்­பட்­டுள்ள விஜிதா மற்றும் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டுள்ள எம்.பிரசாந் ஆகிய இரு­வரும் கணவன் மனை­வி­யெ­னவும் இவ­ரது பிள்­ளையே லக்­சிகா எனும் சிறு­மி­யெ­னவும் கனவன் மனை­வி­யான இவர்கள் இரு­வரும் கடந்த ஒரு­வ­ரு­ட­மாக பிரிந்து வாழ்­வ­தா­கவும் ஆரம்­பக்­கட்ட பொலிஸ் விசா­ர­ணை­களில் இருந்து தெரி­ய­வந்­தள்­ள­தாக பொலிசார் குறிப்­பிட்­டனர்.

இவ்­வி­ரு­வ­ருக்­கு­மி­டையில் நீண்ட நாட்­க­ளாக இருந்­து­வந்த குடும்பத் தக­ராறே இந்தப் படு­கொ­லைக்கு மூல­கா­ர­ண­மான அமைந்­துள்­ள­தென்று விசா­ர­ணை­களின் போது தெரி­ய­வந்­துள்­ள­தாகப் பொலிஸார் தெரி­வித்­தனர்.

இறு­தி­யாக கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று முறைப்­பாடு ஒன்றின் அடிப்­ப­டையில் கணவன்- மனைவி ஆகியோர் வெல்லாபொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.

இச் சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிகுடி பிரதேசத்துக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் சிசிர தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் குறிப்பிட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13