( மயூரன் )

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயாரை மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேகநபரை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம்.றியாழ் உத்தரவிட்டுள்ளார்.

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயாரை மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கு விசாரணை இன்றைய தினம் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன் போது குறித்த குற்றத்தை புரிந்தார் எனும் சந்தேகத்தில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். 

அதனைத் தொடர்ந்து சந்தேக நபரை எதிர்வரும் 8 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.