மலை­யகத் தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்வு தொடர்­பான கூட்டு ஒப்­பந்தம் அடுத்த வாரம் கையெ­ழுத்­தி­டப்­ப­டலாம் என   சபையில் தொழில் மற்றும் தொழி­லாளர் உற­வுகள் அமைச்சர் டபிள்யூ.ஜே.எம்.சென­வி­ரட்ன தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற தொழில் அமைச்சு தொடர்­பான வரவு செலவுத் திட்­டத்தின் குழு­நிலை விவா­தத்தில் ஐ.தே.கட்சி நுவ­ரெ­லியா மாவட்ட எம்.பி. அர­விந்­த­குமார் எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளித்த போதே அமைச்சர் ஜோன் சென­வி­ரட்ன மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அதில் மார்ச் 31 ஆம் திக­தி­யுடன் கூட்டு ஒப்­பந்தம் காலா­வ­தி­யா­கி­விட்­டது. 9 மாதங்கள் ஆகி­விட்­டன. எப்­போது தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பள உயர்வு வழங்­கப்­படும். கூட்டு ஒப்­பந்தம் எப்­போது கையெ­ழுத்­தி­டப்­படும் எனக் கேட்­டி­ருந்தார்.

அமைச்சர் தொடர்ந்து குறிப்­பி­டு­கையில்,

மலை­யகத் தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்வு தொடர்­பான கூட்டு ஒப்­பந்தம் தொடர்பில் முத­லா­ளிமார் சம்­மே­ள­னமும் தொழிற்­சங்­கங்­களும் இணக்­கப்­பாட்­டுக்கு வர­வில்லை.

அவர்­களை அழைத்து பேச்­சுக்­களை நடத்­தினேன். ஆனால் பலன் கிடைக்­க­வில்லை. பெரும்­பாலும் அடுத்­த­வாரம் இக் கூட்டு ஒப்­பந்தம் கையெ­ழுத்­தி­டப்­ப­டலாம் என நம்­பு­கிறேன். இதன்­போது கையெ­ழுத்­தி­டப்­ப­டா­விட்டால் இரண்டு தரப்­பி­ன­ரு­டனும் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­துவேன் என்றார்.

அமைச்சர் ஜோன் சென­வி­ரட்ன தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

தனியார் ஊழி­ய­ர்களுக்கு ரூபா 2500 சம்­பள உயர்வு வழங்­கப்­படும். அது தொடர்­பி­லான சட்­ட­மூலம் தயா­ரிக்­கப்­பட்டு சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்­திற்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது. அது கிடைத்­த­வுடன் பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­பட்டு நிறை­வேற்­றப்­படும்.

அத்­தோடு தனி­யார்­துறை ஊழி­யர்களின் அடிப்­படை சம்­பளம் ரூபா 10000 ஆக ஜன­வரி தொடக்கம் நிர்­ண­யிக்­கப்­படும். ஊழியர் சேம­லாப நிதி­யி­லி­ருந்து 100 க்கு 30 வீதம் கடன்­பெறும் திட்டத்தை அமைச்சு தற்போது நடைமுறைப்படுத்துகின்றது. ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்பு செய்யாத தொழில் தருநர்கள் தொடர்பில் எதிர்காலத்தில் நடவடிக்கைகள் எடுக்கப் படும் என்றார்.