அமரர் டீ.ஏ.ராஜபக்ஷவின் 53 ஆவது நினைவு தின நிகழ்வில் ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

Published By: J.G.Stephan

07 Nov, 2020 | 07:32 PM
image

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களின் பங்கேற்புடன் அமரர் டீ.ஏ.ராஜபக்ஷவின் 53 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு வீரகெட்டிய, மெதமுலன இல்லத்தில் பிரித் உபதேசமும் இன்று (2020.11.07) முற்பகல் தானம் வழங்கும் புண்ணிய நிகழ்வும் இடம்பெற்றது.


ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் பாரியார்  திருமதி. அயோமா ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோரின் பங்கேற்புடன் நேற்று (2020.11.06) பிற்பகல் அமரர் டீ.ஏ.ராஜபக்ஷ மற்றும் தந்தினா சமரசிங்க திசாநாயக்க ராஜபக்ஷ ஆகியோரின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் சமல் ராஜபக்ஷ, திருமதி. சந்திரா ராஜபக்ஷ, திரு.பசில் ராஜபக்ஷ, அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் நிபுண ரணவக்க உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மெதமுலனவில் அமைந்துள்ள அமரர் திரு.டீ.ஏ.ராஜபக்ஷ மற்றும் திருமதி. தந்தினா சமரசிங்க திசாநாயக்க ராஜபக்ஷ ஆகியோரின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து, இடம்பெற்ற தீப பூஜையிலும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

பிரித் உபதேசத்தில் ஹபுகம்பொத புரான மஹா விகாராதிபதி மித்தெனியே இந்திரரதன தேரர், பல்லே முலன கிருவாசேய விகாராதிபதி சபுகஸ் யாயே தம்மரதன தேரர், மற்றும் ஹபுகம்பொத அதுல தக்ஷினாராம விகாராதிபதி வகமுல்லே சந்திரவிமல தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் கலந்து கொண்டனர்.



தானம் வழங்கும் புண்ணிய நிகழ்வில் ருஹுணே வரலாற்று சிறப்புமிக்க திஸ்ஸமஹாராம, சந்தகிரி உபய ரஜமஹா விகாராதிபதி, காவன்திஸ்ஸ பரிவேனாத்யக்ஷ, மாத்தறை கந்தபட பத்துவ உள்ளிட்ட மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய இரு மாகாணங்களினதும் சங்கநாயக்கர், கலாநிதி தேவாலேகம தம்மசேன தேரர், சத்தர்ம கீர்த்தி ஸ்ரீ விமலசிறி ருஹுணு மாகம்பத்துவ உள்ளிட்ட கிருவாகம் நீதித்துறை தலைமை சங்கநாயக்கர் கசாகல ரஜமஹா விகாராதிபதி பரிவேணாதிபதி தலம் பொறுவே இந்து சுமண தேரர் மற்றும் மாத்தறை, ஹம்பந்தோட்டை ஆகிய இரு மாகாணங்களுக்கான சங்கநாயக்கர் முல்கிரிகல ரஜமஹா விகாராதிபதி பெலிகல்லே சரணபால தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் கலந்து கொண்டனர்.



கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் முறையான சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்பட்டு, குடும்ப உறுப்பினர்களின் பங்கேற்புடன் மாத்திரம் இந்த வழிபாடுகள் இடம்பெற்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04
news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41
news-image

இன்று பல அலுவலக ரயில் சேவைகள்...

2024-04-16 10:07:27
news-image

மரதன் ஓட்டப் போட்டியில் மகனுக்கு ஆதரவளிக்கச்...

2024-04-16 10:26:53
news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 10:39:31
news-image

3 நாட்களில் 167 வீதி விபத்துக்கள்;...

2024-04-16 10:28:57
news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55
news-image

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் :...

2024-04-15 16:12:00
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்...

2024-04-15 17:06:59
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் :...

2024-04-15 16:09:52