விமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர். பரிசோதனை

Published By: Digital Desk 3

07 Nov, 2020 | 06:43 PM
image

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி (டயலொக்) உடன் சுகாதார அமைச்சகம் இணைந்து, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) விரைவான பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள வழிவகுத்துள்ளது.

Robotic Arm இணக்கமான 4000 பரிசோதனைக் கருவிகளுக்கான டயலொக்கின் பங்களிப்பானது, கொவிட் -19 தொற்றுநோய்களின் போது தேசிய சுகாதாரப் பாதுகாப்பு முயற்சிகளை மேம்படுத்துவதற்கான நிறுவனத்தின் தற்போதைய உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும்.

ஏப்ரல் 2020 இல், கொவிட் -19 தொற்றுநோயுடன் தொடர்புடைய சிக்கலான சுகாதார உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக டயலொக் ரூ.2000 இலட்சம் தொகையை வழங்குவதற்கான உறுதி மொழியை அளித்தது.

இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரின் உறுதிமொழிக்கு அமைய சில வாரங்களுக்குப் முன்பு நீர்கொழும்பு மருத்துவமனையில் 10 படுக்கைகளை கொண்ட ICU ஐ மேம்படுத்த உதவியுள்ளதுடன் மேலும் பல ICU விரிவாக்கங்கள் விரைவில் மேற்கொள்ளப்படும்.

Robotic Arm பி.சி.ஆர் சோதனை வசதி பி.சி.ஆர் பரிசோதனையை நடத்துவதற்கும் முடிவுகளை அறிக்கையிடுவதற்குமான நேரத்தை 8 மணித்தியாலத்திலிருந்து 2.5 மணி நேரமாக வெகுவாக குறைக்கின்றது.

இது குறித்து டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை நிர்வாக அதிகாரி சுபுன் வீரசிங்ஹ கருத்து தெரிவிக்கையில்,

“ CE   மற்றும் ஐரோப்பிய IVD சான்றளிக்கப்பட்ட உலகத் தரம் வாய்ந்த ரோபோ தீர்வுகள், 32 மாதிரிகளை இணையாக செயலாக்குவதுடன் கணிசமாக பாதுகாப்பான மற்றும் விரைவான சோதனை மற்றும் அறிக்கையிடலை வெறும் 2.5 மணி நேரத்தில் செயல்படுத்துகிறது.

இந்த பொறிமுறையானது வாரத்திற்கு மனித நேரங்களை பயனுள்ளதாக குறைப்பதன் மூலம் சுகாதாரத் துறைக்கும் அரசாங்க சுகாதார அதிகாரிகளுக்கும் சிறப்பாக உதவுகிறது.

இந்த ரோபோ தீர்வுகள் மூலம் விரைவான சோதனை மற்றும் அறிக்கையிடலுடன் பயணிகளின் மற்றும் நமது தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் இந்த முயற்சியில் பங்கேற்க எங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கிய சுகாதார அமைச்சகத்திற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என தெரிவித்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சர்  பவித்ரா வன்னியராச்சி, ”

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அதிவேக ரோபோ பி.சி.ஆர் பரிசோதனைக்கு வசதி செய்வது டயலொக்கின் மற்றொரு சிறந்த முயற்சியாகும்,

ஏனெனில் அவர்கள் இலங்கையில் கொவிட் -19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கான எங்கள் முயற்சிகளில் சுகாதார அமைச்சகத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர்.

டயலொக்கின் சமீபத்திய பங்களிப்பானது நாட்டின் முக்கியமான சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் பல பாராட்டத்தக்க முயற்சிகளை அபிவிருத்தி செய்வதாக சுகாதார அமைச்சகத்திற்கு வழங்கிய ரூ.2000 இலட்சம் உறுதிமொழிக்கு அமையவே இடம்பெறுகின்றது. டயலொக் ஆசிஆட்டாவின் தொடர்ச்சியான முயற்சிகள் மற்றும் இந்த தேசிய முயற்சிக்கு அவர்கள் அர்ப்பணித்த சேவைக்கு எங்கள் மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58