நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள மலிவான ஒரு உணவு!

Published By: Jayanthy

06 Nov, 2020 | 07:51 PM
image

கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ள நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்த உணவுகளை உட்கொள்ளளும் படி சுகாதார அமைச்சும், வைத்தியர்களும் பரிந்துரைத்துள்ளனர். உலக சுகாதார நிறுவனமும் இதனையே பரிந்துரை செய்திருக்கிறது.

Home remedy for impotency in men|ஆண்மை சக்தியை அதிகரிக்கும் முருங்கைக் கீரை  பச்சரிசிக் கஞ்சி!- Dinamani

இதற்கமைய நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவு போசாக்கு நிறைந்ததாக உள்ளதா என்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

நோய் எதிர்ப்பு சக்தி  நிறைந்த உணவுகள் என்ற உடன் அதிக பணம் செலவு செய்து கொள்வனவு செய்ய வேண்டியதில்லை, மிகவும் மலிவான விலையில் நாம் பெற்றுக்கொள்ளக்கூடியதும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள இயற்கை உணவுகளில் ஒன்று தான் முருங்கைக்கீரை. 

முருங்கையில் கேரட்டில் உள்ளதை விட நான்கு மடங்கு அதிகமாக விட்டமின்- ஏ யும்,  வாழைப்பழத்தில் உள்ளதை விட 50 மடங்கு அதிகமாக விட்டமின் பி 2 வும், வேர்க்கடலையில் உள்ளதை விட 50 மடங்கு அதிகமாக விட்டமின் பி3 யும் உள்ளது. 

இதேவேளை, பாலில் உள்ளதை விட 4 மடங்கு அதிகமாக கல்சியமும்,  இரண்டு மடங்கு  அதிகமாக புரோட்டீனும் முருங்கையில் உள்ளது. முட்டையில் உள்ளதைவிட ஐந்து மடங்கு அதிகமாக மெக்னீசியம் முருங்கை கீரையை உண்பதால் பெற்றுக்கொள்ள முடியும். 

இதனால் தான் முருங்கை உண்பதால் எமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. 

குறிப்பாக விட்டமின் ஏ,சீ,மற்றும் டீ, அடங்கும் உணவு வகைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். இதனைத்தவிர, சின்க் மற்றும் செலேனியம் கனிப்பொருள் அடங்கிய உணவுவகைகளின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துக்கொள்ளமுடியும்.

அந்த வகையில், முருங்கைக்கீரையை உட்கொள்வதன் மூலம் பல முக்கிய ஊட்டச்சத்துக்களை நாம் ஒரே உணவில் பெற்றுக்கொள்ள முடிகின்றது.

வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை முருங்கைக்கீரையை உணவில் சேர்த்து கொள்வதால் நாம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு உயர்த்திக் கொள்ளலாம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29