வார இறுதியில் பொலிஸ் வீதி தடைகள் இடம்பெறும் : அஜித் ரோஹண

Published By: R. Kalaichelvan

06 Nov, 2020 | 03:31 PM
image

வார இறுதி என்பதால் பொது மக்கள் பயணங்களைக் கட்டுப்படுத்தி கொள்ளுமாறு பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

வார இறுதியில் கூட்டங்கள், விளையாட்டு போட்டிகள் என்பன நடத்தப்படுவது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இல்லாத பகுதிகளுக்கும் இது பொருந்தும் என்று அவர் தெரிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை வார இறுதி தினமாகும். பொது மக்கள் தமது நேரத்தை வீடுகளிலேயே கழிக்குமாறும், கொவிட் தொற்றை தடுப்பதற்கான வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பை வழங்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட விதிகளை மீறியமை தொடர்பில் இதுவரையில் 2,532 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை 6.00 மணியுடனான 24 மணித்தியால காலப்பகுதியில் 139 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் 26 வாகனங்கள் பொலிசாரால் பொறுப்பேற்க்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் இதுவரையில் பொலிசாரால் பொறுப்பேற்க்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 382 ஆகும்.

முக கவசம் அணியாமை, சமூக இடைவெளியை பேணாமை ஆகியவற்றின் காரணமாக நேற்றைய தினம் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் 96 பேர் இதுதொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47