போதைப்பொருளுக்கு எதிரான யுத்தத்தில் பிலிப்பைன்ஸில் 8 ஆயிரம் பேர் கொலை!

Published By: Vishnu

06 Nov, 2020 | 10:19 AM
image

2016 ஆம் ஆண்டு முதல் பிலிப்பைன்ஸில் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கையில் சுமார் 8,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை வெளியிடப்பட்ட பிலிப்பைன்ஸ் தகவல் முகமை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016 ஜூலை முதல் 234,000 க்கும் மேற்பட்ட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 

இதன்போது 357,000 க்கும் மேற்பட்ட நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 8 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாகவும் பிலிப்பைன்ஸின் தேசிய காவல்துறை ஆணையாளர் ஒரு செய்தி மாநாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சோதனை நடவடிக்கைகளின்போது குறைந்தது 1.29 மில்லியன் மக்கள் சரணடைந்துள்ளதாகவும் சட்டவிரோத போதைப்பொருள் நடவடிக்கைகளுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்தும் செயற்படுவோம் என்றும் அவர் கூறினார்.

பிலிப்பைன்ஸில் போதைப்பொருளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் 2016 ஜூன் அன்று ரொட்ரிகோ துதெர்த்தே ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஆரம்பமாகியுள்ளது.

ஜனாதிபதி ரொட்ரிகோ துதெர்த்தே இந்த நடவடிக்கை போதைப்பொருளை கட்டுப்படுத்துவதை நோக்கமாக கொண்டிருந்தபோதும், மனித உரிமை குழுக்களால் இவை கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் (HRW) கருத்துப்படி, துதெர்த்தே போதைப்பொருட்களுக்கு எதிரான போரில் 12,000 க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொலை செய்துள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளது.

அது மாத்திரமின்றி பிலிப்பைன்ஸ் தேசிய காவல்துறை "சட்டவிரோத கொலைகளை நியாயப்படுத்துவதற்கான ஆதாரங்களை பொய்யாக்குகிறது" என்றும் HRW குற்றம் சாட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17