மன்னார் கிராம அலுவலகர் கொலையின் பின்னணியிலுள்ளோர் கைதுசெய்யப்பட வேண்டும் - செல்வம்

Published By: Digital Desk 4

05 Nov, 2020 | 08:02 PM
image

மன்னார், மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் கிராம அலுவலகர்களுக்கான  பதில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றும் இலுப்பைப் கடவை கிராம அலுவலகர் எஸ்.விஜியேந்திரன் (வயது-55)  என்பவர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மனிதாபிமானத்திற்கு அப்பால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இவரது படுகொலை தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய்ககூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கு இன்று  வியாழக்கிழமை(5) அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,

மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் கிராம அலுவலகர்களுக்கான  பதில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றும் இலுப்பைப் கடவை கிராம அலுவலகர் எஸ்.விஜியேந்திரன் என்வரின் கொலையை நான் வண்மையாக கண்டிக்கின்றேன்.

 இவ்வாறான கொடூரமான படு கொலைகள் தவிர்க்கப்பட வேண்டியவை. இவ்வாறான படுகொலைக் கலாச்சாரம் நமது மண்ணிலிருந்து கலைந்தெறியப்பட வேண்டும்.

இவ்வாறான கொலை அன்மைக்காலங்களில் மன்னார் மாவட்டத்தில் அதிகரித்து வருவதை நான் அவதானித்து வருக்கின்றேன்.

குறித்த சம்பவங்கள் சட்டம், ஒழுங்கு சார் பிரச்சினையை தோற்றுவிப்பதோடு எமது பகுதியில் அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் என்பதனையும் தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

மேலும் இந்த கொலையின் பின்னனியில் உள்ள நபர்கள் யார்? என்பதனை இனங்கண்டு அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தன்டனை வழங்க வேண்டும். என அவர் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01