வீடுகளிலிருந்து பொருட்களை கொள்வனவு செய்யும் நடைமுறை யாழில்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது - யாழ்ப்பாண வணிகர் கழகத் தலைவர் 

Published By: Digital Desk 3

05 Nov, 2020 | 05:01 PM
image

( எம்.நியூட்டன்)

யாழ் நகரில் பொதுமக்களின் ஒன்றுகூடலை தடுக்கும் முகமாக யாழ் வணிகர் கழகத்தினரின் ஏற்பாட்டில் வீடுகளிலிருந்து பொருட்களை கொள்வனவு செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் தலைவர் இ.ஜெயசேகரன் தெரிவித்தார்.

இவ்  விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத்  தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

தற்போது கொரோனா தாக்கத்தின் எதிரொலியாக வட மாகாணத்திலும் இந்த கொரோனாத் தாக்கம் அதிகரித்துக் கொண்டு வருகின்ற காரணத்தினால் நகரத்திற்கு வரும் பொதுமக்களை இயன்ற அளவு குறைக்குமாறு சகல தரப்பினரும் கேட்டுக்கொள்கிறார்கள்.

குறிப்பாக பஸ் போக்குவரத்து தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் சில வேளைகளில் தொடர்ந்து இன்னும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படலாம். அதே நேரத்தில் யாழ்ப்பாண நகரத்திலுள்ள வர்த்தக நிலையங்கள் இயல்பாக இயங்கிக் கொண்டு இருக்கின்றது. ஆனால் அங்கே வருகின்ற பொதுமக்களின் அளவை இயன்ற அளவு குறைக்குமாறு நாங்கள் வர்த்தகர்களை கேட்டிருக்கின்றோம்.

ஏனென்றால் அதிகளவில் மக்கள் கூடாமல் இருக்குமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கின்றோம் அதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள்,உணவுப் பண்டங்கள் மற்றும் உணவகங்களில் இருந்து உணவுகள் தேவைப்படும் பொதுமக்கள் நீங்கள் வியாபார நிலையங்களில் தகவல்களை உங்களுக்கு வழங்க இருக்கிறோம் விரும்பினால் நீங்கள் உங்கள் வீடுகளிலிருந்து குறித்த கடைகளுடன் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான உணவுப் பண்டங்கள் மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை நீங்கள் வீட்டில் இருந்தவாறே பெற்றுக்கொள்ளமுடியும்.

தற்கால சூழ்நிலையில் இவ்வாறான செயற்பாட்டின் மூலம் நகரின் மத்தியில் மக்களின் ஒன்றுகூடலை தடுக்கும் முகமாக யாழ் வணிகர் கழகத்தினரால் குறித்த முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இந்த சேவையினை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33