சார்ளஸ் அதிரடி ; லூசியா ஸவுக்ஸ் வெற்றி (வீடியோ இணைப்பு)

Published By: Ponmalar

25 Jul, 2016 | 12:22 PM
image

சீ.பி.எல். தொடரின் இன்று இடம்பெற்ற லூசியா ஸவுக்ஸ் மற்றும் கயானா வொரியர்ஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் லூசியா ஸவுக்ஸ் அணி 9 விக்கட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய கயானா வொரியர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுகளை இழந்து 159 ஓட்டங்களை பெற்றது.

கயானா வொரியர்ஸ்  அணி சார்பாக அதிரடியாக துடுப்பெடுத்தாடிய கிரிஸ் லைன்  6 ஆறு ஓட்டங்கள் 6 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 86 ஓட்டங்களையும், சுமித் 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

லூசியா ஸவுக்ஸ் அணி சார்பில் ஜெரோம் டெய்லர் மற்றும் வொட்சன் தலா 2 விக்கட்டுகளை கைப்பற்றினர்.

160 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய லூசியா ஸ்வுக்ஸ் அணி 16.1 ஓவர்களில்  1 விக்கட்டை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

லூசியா ஸவுக்ஸ் அணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுதட்தாடிய சார்ளஸ் 52 பந்துகளில் 7 ஆறு ஓட்டங்கள் 5 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 94 ஒட்டங்களையும், வொட்சன் 57 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

கயானா வொரியர்ஸ் அணி சார்பில் தன்வீர் 1 விக்கட்டினை கைப்பற்றினார்.

போட்டியின் ஆட்டநாயகனாக லூசியா ஸவுக்ஸ் அணியின் சார்ளஸ் தெரிவு செய்யப்பட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41