ஜேர்மனியின் தென்பகுதியில் அமைந்துள்ள அன்ஸ்பேர்க் நகரில் தற்கொலைதாரியொருவர் குண்டைவெடிக்கச் செய்ததில் தற்கொலைதாரி பலியானதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சிரியாவில் இருந்து வந்த 27 வயதுடைய புகலிடக்கோரிக்கையாளரே இவ்வாறு குண்டை வெடிக்கவைத்துள்ளார்.

திறந்தவெளியில் இடம்பெற்ற இசை நிகழ்வொன்றின் போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

குண்டு வெடிப்பு இடம்பெற்ற அரங்கிலிருந்து 2500 ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அவசரஅவசரமாக வெளியேற்றப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் ஜேர்மனியில் 3 தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தற்கொலைதாரி கடந்த 2 வருடங்களுக்கு முன் சிரியாவில் இருந்து இங்கு வந்து புகலிடக்கோரிக்கை விடுத்ததாகவும் அது நிராகரிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு உள்துறை அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் காயமடைந்தவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை ஜேர்மனியின் மூனிச் நகரில் இடம்பெற்ற தாக்குதலில் 9 பேர் பலியாகியிருந்ததுடன் ரயிலில் 17 வயதுடைய துப்பாக்கிதாரி மேற்கொண்ட மற்றுமொரு தாக்குதலில் 4 பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.