வவுனியாவில் நடமாடிய தென்பகுதியைச் சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தலில்

Published By: Digital Desk 4

05 Nov, 2020 | 12:17 PM
image

வவுனியா கனகராயன் குளத்தில் தென் பகுதியில் இருந்து சென்றிருந்த ஆறு பேர் சுகாதார திணைக்களத்தினரின் அர்ப்பணிப்பான சேவையினூடாக தனிமைப்படுத்தப்பட்டனர்.

கனகராயன்குளம் புதூர் பகுதியில் 6 பேர் வர்த்தக நிறுவனங்களின் விளம்பரப்பலகையினை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது வவுனியா வடக்கு சுகாதார பிரிவினர் சந்தேகம் கொண்டு விசாரணையினை மேற்கொண்டபோது அவர்கள் கொழும்பில் இருந்து கடந்த 29 ஆம் திகதி வருகை தந்திருந்தமை தெரியவந்தது.

இந்நிலையில் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் தாம் தங்கியிருந்த இடங்களை மறைத்திருந்த போதிலும் சுகாதார திணைக்களத்தினரின் தீவிர விசாரணையில் அவர்கள் கனகராயன்குளத்தில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்ததுடன் கனகராயன்குளத்தில் உள்ள பல வர்த்தக நிலையங்களுக்கும் சென்று வந்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த 6 பேரும் அவர்கள் கனகராயன்குளத்தில் தங்கியிருந்த விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை அவர்கள் சென்ற வர்த்தக நிலையங்கள் சுகாதார பகுதியினரால் மூடப்பட்டுள்ளதுடன் அப்பகுதி மக்களும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகாரபகிர்வு உரிய முறையில் இடம்பெற்றால்தான் பொருளாதார...

2024-03-29 15:38:29
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37