கொரோனா தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - வடமாகாண ஆளுநர் பணிப்பு

05 Nov, 2020 | 12:12 AM
image

அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கொரோனா தடுப்பு வழிகாட்டல்களை பின்பற்றுவதை உறுதி செய்வதோடு விழிப்புணர்வுகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். 

வடமாகாணத்தில் கொரோனா தொற்று இடர் தொடர்பான மீளாய்வுக் கலந்துரையாடல் இன்று (04-11-2020)  காலை 1௦ மணிக்கு வடமாகாண ஆளுநர் திருமதி பீ.எஸ்.எம் சாள்ஸ் தலைமையில் ஆளுநர் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது ஆளுநர் நாம் மேலும் தெரிவிக்கையில்,   

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளை பின்பற்றி, எமது நாட்டின் பொருளாதார நடவடிக்கைளை இலகுவாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய முறைகளை தீர்மானிக்கவேண்டும். 

அத்துடன் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கிராம சேவையாளர்கள் சுகாதார துறையினர், மற்றும் காவற்துறையினரை ஒன்றிணைத்து, கொரோனா தடுப்பு  சுகாதார வழிகாட்டல்களை முறைப்படி கடைப்பிடித்தல் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் வைத்தியசாலை கழிவுகளை அகற்றும் முறை தொடர்பாக பொதுவான ஒரு திட்டத்தை தயாரிக்கும்படியும், அத்துடன் மாணவர்களிடையேயும் கொரோனா சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும். 

மேலும் அரச மற்றும் தனியார் பஸ்களில் பதிவு செய்யப்பட்ட குறித்த பஸ்ஸின் இலக்கத்தை உட்புறத்தில் கட்டாயமாக காட்சிப்படுத்த வேண்டும் பயணிகள், தாம் பிரயாணம் செய்யும் பஸ்ஸின் இலக்கத்தை இலகுவாக குறித்து வைக்க வேண்டும். கடந்த காலங்களை விட தற்போது வடக்கு மாகாணத்தில் வீதி விபத்துக்கள் பெருமளவு குறைவடைந்துள்ளதுடன் வீதி பாதுகாப்பு நடவடிக்கைகளும் சட்டரீதியாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை சிறந்தமுறையில் நடைமுறைப்படுத்திய காவல்துறையினருக்கும் எனது பாராட்டுக்கள்.

அத்துடன் சட்டரீதியற்ற முறையில் நடைபெறும் மண்அகழ்வு, மற்றும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கும் உரிய சட்ட நடவடிகைகளை இறுக்கமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார். 

இதேவேளை, மாவட்ட ரீதியாக டெங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஆளுநர் வினவியபோது  , அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு பரவல் கட்டுப்பாட்டில் இருப்பதாக  மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர். கேதீஸ்வரன் தெரிவித்திருந்தார்.

இக்கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், வடமாகாண பிரதம செயலாளர், வடமாகணத்திற்கு உட்பட்ட மாவட்ட செயலாளர்கள், மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி, காவற்துறையினர் மற்றும் கடற்படை தளபதி ஆகியோர் கலந்துகொண்டனர்,

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47