அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தெரிவாகும் போட்டியில் நான்கு இந்திய வம்சாவளியினர்!

Published By: Jayanthy

04 Nov, 2020 | 07:34 PM
image

அமெரிக்காவில் நடைபெற்று வரும் தேர்தலில் போட்டியிட்டுதன் மூலம் நான்கு ஜனநாயக கட்சியின் இந்திய அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதிநிதிகள் சபைக்கு மீண்டும் தெரிவு செய்யப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கபடுகின்றது. 

அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளிவரும் நிலையில் இந்த தேர்தலில் நான்கு இந்திய அமெரிக்க ஜனநாயக சட்டமன்ற உறுப்பினர்களான டாக்டர் அமி பெரா, பிரமிலா ஜெயபால், ரோ கன்னா மற்றும் ராஜ கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை மீண்டும் அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்குத் தேர்ந்தெடுப்பதற்கான மேடை அமைக்கப்பட்டுள்ளது. 

All four Democratic Indian American lawmakers set for re-election to House of Representatives

தி நியூயார்க் டைம்ஸ் கருத்துப்படி, இன்று மதியம் வரை பெரா  61% வாக்குகள், ஜெயபால் 84.8%, கன்னா 74.1%, கிருஷ்ணமூர்த்தி 71.1% வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜனநாயக கட்சியின் ராஜா கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்து மூன்றாவது முறையாக அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புதுடில்லியில் பிறந்த 47 வயதான கிருஷ்ணமூர்த்தி, லிபர்டேரியன் கட்சியின் வேட்பாளர் பிரஸ்டன் நெல்சனை எளிதில் தோற்கடித்தார். இருதி தேர்தல் முடிவு வெளியான போது, அவர் கணக்கிடப்பட்ட மொத்த வாக்குகளில் கிட்டத்தட்ட 71 சதவீதத்தைப் பெற்றுள்ளார். 

ராஜா கிருஷ்ணமூர்த்தியின் பெற்றோர்கள் இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ராஜா கிருஷ்ணமூர்த்தி முதன்முதலில் 2016 ல் பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆறாவது காங்கிரஸின் மாநிலமான அரிசோனாவைச் சேர்ந்த குடியரசுக் கட்சியின் தற்போதைய டேவிட் ஸ்வெய்கெர்ட்டுக்கு (49.7%) எதிராக டாக்டர் ஹிரால் திப்பிர்னேனி 3 சதவீத புள்ளிகளுக்கு சற்று முன்னிலை வகித்து 50.3% வாக்குகளைப் பெற்றார். 

இதில் திப்பிர்னேனி தேர்ந்தெடுக்கப்பட்டால், 52 வயதான திப்பிர்னேனி, பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது இந்திய அமெரிக்க பெண்மணி ஆவார். 

இதேவேளை 55 வயதான ஜெயபால், பிரதிநிதிகள் சபைக்கு  2016 ல் முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக இந்திய அமெரிக்க சமூகம் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தீர்மானமிக்க சக்தியாக உருவெடுத்துள்ளது. கடந்த மாதம் வெளியிடப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, பதிவு செய்யப்பட்ட இந்திய அமெரிக்க வாக்காளர்களில் 72% பேர் பிடனுக்கு வாக்களிக்கத் திட்டமிட்டிருந்தனர், 22% பேர் டிரம்பிற்கு வாக்களிப்பதாகக் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10