வவுனியாவில் கொவிட் -19 அச்சம் - மீன் விற்பனை வீழ்ச்சி

Published By: Digital Desk 4

04 Nov, 2020 | 07:22 PM
image

கொவிட் -19 அச்சம் காரணமாக வவுனியாவில் மீன் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கையில் பேலியகொட மீன் சந்தையில் கொவிட் – 19 கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களாக 4 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாடு தற்போது மிக அபாயகரமான சூழ்நிலையில் காணப்படுகின்றது.

இந்நிலையில் பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புடைய நபர்கள் வடமாகாணம் உட்பட நாடு முழுவதும் தனிமைப்படுத்துள்ள நிலையில் மீன் தொடர்பில் மக்கள் பாரிய அச்சத்தில் உள்ளனர். 

இதன் காரணமாக வவுனியா மாவட்டத்திற்கு யாழ்ப்பாணம் , மன்னார் ஆகிய பகுதிகளிலிருந்து வருகின்ற மீன் வகைகளின் விற்பனை வீழ்ச்சி நிலையில் காணப்படுகின்றது.

குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் மக்கள் மீன்களை பெரியளவில் கொள்வனவு செய்யவில்லை என்பதுடன், பலரும் தொழில் வாய்ப்பை இழந்துள்ளனர். மீன்கள் விற்பனையின்றி நகர மீன் சந்தை , குருமன்காடு மீன் சந்தை , குழுமாட்டுச்சந்தி மீன் சந்தை போன்ற இடங்களில் மீன்கள் தேங்கி காணப்படுகின்றது.

இதன் காரணமாக மக்களின் நடமாட்டமின்றி மீன் சந்தைகள் வெறிச்சோடி காணப்படுவதுடன் வியாபாரிகளும் நட்டமடைந்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02