கொரோனா அச்சம் ; நுவரெலியா மாவட்ட நீதிமன்றம், நீதவான் நீதிமன்ற நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

Published By: Digital Desk 4

04 Nov, 2020 | 07:17 PM
image

கொரோனா வைரஸ் தொற்றாளராக இனங்காணப்பட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவர், நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக, நுவரெலியாவிலுள்ள நீதிமன்றத்துக்கு சென்றதால், நுவரெலியா மாவட்ட நீதிமன்றம், நீதவான் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை எதிர்வரும் 16 ஆம் திகதிவரை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு, நுவரெலியா  சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் கருத்துரைத்த அச்சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி காமினி சேனாநாயக்க, நுவரெலியா மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட கூட்டம், இன்று (4) நடைபெற்றதாகவும் அதில் கலந்துகொண்ட அனைத்து சட்டத்தரணிகளும், நீதிமன்ற நடவடிக்கைகளை 16ஆம் திகதிவரை இடைநிறுத்துவதற்கு இணக்கம் தெரிவித்தனர் என்றும் தெரிவித்தார்.

எனவே, சட்டத்தரணிகளின் கோரிக்கைக்கு அமைவாக நுவரெலியா மேல் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், நீதவான் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை 16 ஆம் திகதிவரை இடைநிறுத்துமாறு, மூன்று நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

இந்தக் கோரிக்கை, நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும், நீதிபதிகள் தெரிவித்துள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மேற்படி குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரி, 26 ஆம் திகதி நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக நுவரெலியாவிலுள்ள நீதிமன்றத்துக்கு வந்துச் சென்றுள்ளார் என்றும் அதன் பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ள2தாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58