ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் அரசாங்கத்துக்கு எதிரான பாதயாத்திரையை தடைசெய்வதற்கு அரசாங்கம் சதித்திட்டங்களை மேற்கொண்டுவருகின்றது. எந்த தடைகளை ஏற்படுத்தினாலும் அரசாங்கத்துக்கு எதிரான பாதயாத்திரை எதிர்வரும் 28ஆம் திகதி கண்டியில் ஆரம்பமாகும்என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

அத்துடன் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருடம் கழிந்தும் நாட்டின் அபிவிருத்திக்காக எந்த வேலைத்திட்டத்தையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் இதுதொடர்பாக அரசாங்கத்தை விமர்சித்தால் அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுகின்றனர். அத்துடன் எதிர்க்கட்சி உறுப்பினர்களை பழிவாங்கும் செயலையே அரசாங்கம் செய்து வருகின்றது.

நாட்டை அபிவிருத்தி பாதைக்கு கொண்டுசெல்ல அரசாங்கத்திடன் எந்த வேலைத்திட்டமும் இல்லை. கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களையே சர்வதேசத்துக்கு காட்டிக்கொண்டிருக்கின்றது என்றார்.