ஆஸ்திரிய பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 14 பேர் கைது

Published By: Vishnu

04 Nov, 2020 | 08:13 AM
image

வியன்னாவில் திங்களன்று நடந்த பயங்கர தாக்குதலுடன் தொடர்புடைய சோதனைகளில் 14 பேரை ஆஸ்திரிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வியன்னாவில் மத்திய பகுதியில் 20 வயதான இஸ்லாமிய இளைஞர் உட்பட பலரால் கடந்த திங்களன்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

மேற்படி 20 வயதுடைய இளைஞர் ஐ.எஸ்.ஐ.எல் (ஐ.எஸ்.ஐ.எஸ்) பயங்கரவாத குழுவில் இணைவதற்காக சிரியாவிற்கு பயணம் செய்வதற்கான முயற்சிகளை முன்னெடுத்தாகவும் விசாரணைகளின் மூலம் பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர்.

எவ்வாறெனினும் டிசம்பர் மாதம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர் வியன்னாவில் பொது மக்கள் மீது துப்பாக்கி சூடு மேற்கொண்டதன் பின்னர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ஆஸ்திரியாவின் தலைநர் வியன்னாவில் மொத்தமாக ஆறு இடங்களில் திங்கட்கழமை இரவு 8.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் நான்கு பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் ஒரு பொலிஸ் அதிகாரி உட்பட 22 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் மூவர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் வியன்னாவின் மேயர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் ஜேர்மன் பெண் ஒருவர் இருப்பதாகவும் ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் ஹெய்கோ மாஸ் செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தினார்.

இது இவ்வாறிருக்க இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட 18 சோதனை நடவடிக்கையில் 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வியன்னாவின் மேயர் நெஹம்மர் செவ்வாயன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17