மலை­யக தோட்டத் தொழி­லா­ளர்­களின் தேவை­களை கம்­ப­னி­களே நிறை­வேற்ற வேண்டும் என்றால் ஏன் தேர்­தலில் அம்­மக்­க­ளிடம் வாக்கு கேட்­கின்­றீர்கள்? அம்­மக்­களை கம்­ப­னி­க­ளுக்கு வாக்­க­ளிக்க சொல்­லுங்கள் என நேற்று சபையில் ஜே.வி.பி. எம்.பி. அநுர குமார திஸா­நா­யக்க தெரி­வித்தார்.

மலை­யக தோட்­டத்­தொ­ழி­லா­ளர்கள் இன்றும் அடி­மை­க­ளா­கவே நடத்­தப்­ப­டு­கின்­றனர். எனவே அவர்­க­ளையும் மனி­தர்­க­ளாக மதிக்கும் நிலை­மையை ஏற்­ப­டுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற சுகா­தார அமைச்சு மற்றும் தொழில் மற்றும் தொழி­லாளர் உற­வுகள் தொடர்­பான அமைச்­சுக்­களின் குழு நிலை விவா­தத்தில் உரை­யாற்­று­கை­யி­லேயே அநுர குமார திஸா­நா­யக்க எம்.பி. மேற்­கண்­ட­வாறு கூறினார்.

சபையில் அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

மலை­யக தோட்டத் தொழி­லா­ளர்­களும் இந்­நாட்டின் உழைக்கும் வர்க்­கத்­தி­னரை சேர்ந்­த­வர்­களே என்­ப­தனை புரிந்­து­கொள்­ளுங்கள். ஆனால் அவர்கள் தொடர்பில் எந்த வித­மான அக்­க­றையும் காட்­டப்­ப­டு­வ­தில்லை.

இன்றும் அவர்­க­ளது நாள் சம்­பளம் ரூபா 450 ரூபா. அத்­தோடு கொடுப்­ப­ன­வுகள் இணைந்­தாலும் ரூபா 620 கிடைக்­கின்­றது. இத்­தொ­கையை கொடுப்­ப­ன­வாக பெற்றுக் கொண்டு வாழ்க்­கையை நடத்த முடி­யுமா? ஏன் அம்­மக்­க­ளுக்கு மட்டும் அநீதி இழைக்­கப்­ப­டு­கி­றது.

மலை­யக தோட்டத் தொழி­லா­ளர்கள் இன்று வறுமைக் கோட்டில் வாழும், சுகா­தார உரி­மைகள் மறுக்­கப்­பட்ட, வாழ்­வா­தார உரி­மைகள் மறுக்­கப்­பட்ட, இந்­நாட்டின் அடி­மைப்­ப­டுத்­தப்பட்ட, ஓரங்­கட்டப்­பட்ட மக்­க­ளாக வாழ்­கின்­றனர்.

இம்­மக்கள் தங்­க­ளது தேவை­களை நிறை­வேற்­று­மாறு அரசை கேட்டால் தோட்ட கம்­ப­னிக்­கா­ரர்­களே அதற்கு பொறுப்பு, அவர்­க­ளிடம் கேளுங்கள் என்­கி­றீர்கள். அப்­ப­டி­யென்றால் தேர்­தலில் அம் மக்­களின் வாக்­கு­களை ஏன் கேட்­கின்­றீர்கள்.

அம் மக்­க­ளது வாக்­கு­க­ளையும் கம்­ப­னிக்­கா­ரர்­க­ளுக்கே கொடுங்கள் என்று சொல் லலாமே. மலையகத் தோட்டத் தொழி லாளர்கள் அடிமைகள் என்ற நிலைப் பாட்டிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். ஏனைய உழைக்கும் வர்க்கத்தினர் அனு பவிக்கும் உரிமைகள் அவர்களுக்கும் வழங் கப்பட வேண்டும் என்றார்.