தற்போதைய அரசாங்கத்தின் அபிவிருத்தி மூலோபாயங்கள் தொடர்பாக சிறு குழுவொன்று பீதியடைந்து நாட்டின் அபிவிருத்திப் பயணத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 

சுலோக அட்டைக் கலாசாரத்தின் மூலம் நாட்டை முன்னேற்ற முடியாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.