ஊரடங்கை மீறிய 1992 பேர் கைது

Published By: Digital Desk 4

03 Nov, 2020 | 03:57 PM
image

(செ.தேன்மொழி)

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்திற்கு புறம்பாக செயற்பட்டதாக இதுவரையில் 1992 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இவர்களிடமிருந்து 307 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மேல் மாகாணத்தில் 112 பொலிஸ் பிரிவுகளிலும், குளியாப்பிட்டியில் ஐந்து பொலிஸ் பிரிவுகளிலும், இரத்தினபுரி மாவட்டத்தில் எஹேலியகொட பொலிஸ் பிரிவுக்கும் மற்றும் குருநாகல் நகரசபைக்குச் சொந்தமான பகுதிகளிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. 

இதேவேளை,கேகாகைல மாவட்டத்தில் ஹேமாத்தகம,மாவனெல்ல மற்றும் புலத்கோஹபிட்டி பொலிஸ் பிரிவு,கிரிவுள்ள பொலிஸ் பிரிவு மற்றும் கலிகமுவ பிரதேச சபைக்கு சொந்தமான பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஊரடங்குச் சட்டதை மீறியமை தொடர்பில் நேற்று திங்கட்கிழமை காலை ஆறு மணி தொடக்கம் இன்று செவ்வாய்கிழமை காலை ஆறு மணிவரையில்  1180 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதன்போது அவர்களிடமிருந்து 25 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டத்தில் திவுலப்பிட்டி மற்றும் மினுவாங்கொட ஆகிய பகுதிகளுக்கு  கடந்த மாதம் 4 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறியதாக, இதுவரையில் 1992 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது 307 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள நபர்களில்,தொற்றாளருடன்  நேரடி தொடர்பு கொண்டுள்ளவர்களின் வீடுகளுக்கு முன்னாள் சுகாதார பிரிவினரின் அறிவித்தலுக்கு மேலதிகமாக சிவப்பு அறிவித்தல் ஒன்று காட்சிப்படுத்தப்படுவதுடன்,இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை தொடர்பு கொண்டுள்ளதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள் இருக்கும் வீடுகளில் சுகாதார பிரிவினரின் அறிவித்தலுக்கு மேலதிகமாக மஞ்சள் நிற அறிவித்தலும் காட்சிப்படுத்தப்பட்டருக்கும். அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள ஆலோசனைக்கமைய ஒத்துழைப்பை வழங்குங்கள்.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் நபர்களுள் எவருக்காவது வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டால் 011-7966366,1996 மற்றும் 1933 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்க முடியும். இதேவேளை கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும்  கொரோனா வைரஸ் தொற்றை தவிர்ந்த ஏனைய அவசர சிகிச்சைக்கான நோயாளர்கள் வைத்தியசாலைக்குச் செல்ல முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02