லங்கா பிரீமியர் லீக் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது மலேசியாவில்?

Published By: Vishnu

03 Nov, 2020 | 01:56 PM
image

லங்கா பிரீமியர் லீக் தொடரின் ஆரம்பத் திகதி மறுபரிசீலனை செய்யப்படவுள்ளதுடன், இப் போட்டிகளை ஐக்கிய அரபு இராஜ்ஜியம் அல்லது மலேசியாவில் நடத்துவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பில் 'ESPNcricinfo' விளையாட்டு செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்துள்ள லங்கா பிரீமியர் லீக்கின் பணிப்பாளர் ரவின் விக்ரமரத்ன, 

இலங்கையில் இத் தொடரை நடத்துவதற்கு நாங்கள் விருப்பம் கொண்டுள்ளோம். எனினும் இலங்கையில் எழுந்துள்ள கொரோனா நெருக்கடி காரணமாக சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய ஆலோசனைகளை வீரர்கள் பின்பற்ற வேண்டும்.

அதன்படி 14 நாள் தனிமைப்படுத்தல் சில வீரர்களுக்கும், நாட்டுக்கு வருகை தரும் ஒளிபரப்புக் குழுக்கள் மற்றும் வர்ணனையாளர்களுக்கும் அவர்களது செயற்பாடுகளை முன்னெடுக்க தடையாக அமையலாம்.

லங்கா பிரீமியர் லீக் தொடர்பில் தற்போது மூன்று தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

அவற்றில் ஒன்றில் இலங்கையின் ஹம்பாந்தோட்டை மற்றும் பல்லேகல ஆகிய இரு இடங்களில் மாத்திரம் போட்டியை நடத்துவது. இரண்டாவது தீர்மானம், அனைத்து போட்கைளையும் ஒரே இடத்தில் நடத்துவது. 

எனினும் இந்த இரண்டு தீர்மானங்களில் சிக்கல் நிலைகள் உள்ளது.

இறுதித் தீர்மானம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது மலேசியாவில் விளையாடுவதுதான். எனினும் இது இலங்கையின் உள்ளூர் போட்டியாகும் இது. எனவே போட்டிகளை இலங்கையில் நடத்த வேண்டும் என்பது அனைவரது விருப்பமாகும்.

எவ்வாறெனினும் இலங்கை கிரிக்கெட் நிர்வாக அதிகாரிகள் மற்றும் போட்டி அமைப்பாளர்கள் புதன்கிழமை இலங்கையின் சுகாதார அமைச்சக அதிகாரிகளை சந்திக்கவுள்ளனர்.

அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள முடியும். 

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் கோரிக்கைகளில், வீரர்கள் ஐந்து முதல் ஏழு நாள் தனிமைப்படுத்தலை மட்டுமே செய்ய வேண்டும், அதன் பிறகு அவர்கள் போட்டிக்கான பயிற்சிகளை ஆரம்பிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்றார்.

லங்கன் பிரீமியர் லீக் தொடரை நவம்பர் 21 ஆம் திகதி ஆரம்பிக்க ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்கத்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21