கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடைகொடுத்தார் வொட்சன்

Published By: Vishnu

03 Nov, 2020 | 01:28 PM
image

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஷேன் வொட்சன் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். 

39 வயதான ஷேன் வொட்சன் சர்வதேச கிரிக்கெட் மற்றும் உள்ளூர் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளதாக நேற்றைய தினம் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந் நிலையிலேயே இன்றைய தினம் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தான் ஓய்வு பெறுவதாக வொட்சன் ஒரு காணொளிக் காட்சியொன்றின் மூலமும், டுவிட்டர் பதிவினூடாகவும் அறிவித்துள்ளார்.

கடந்த 2016 இல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வொட்சன், 2018 இல் இருந்து சென்னை சூபபர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். 

அந்த வருடம் சென்னை அணி கிண்ணத்தை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவரும் வொட்சன் ஆவார்.

கடந்த தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக சதம் அடித்து இறுதிப் போட்டிக்கு அணியை கொண்டு சேர்த்ததுடன், இறுதிப் போட்டியில் மும்பைக்கு எதிராக முழங்காலில் ரத்தக் காயத்துடன் வெற்றியை நோக்கி போராடியும் ரசிகர்களின் மனங்களை வென்றார்.

இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் வொட்சன் சோபிக்கத் தவறினாலும், ஐ.பி.எல். அரங்கில் மொத்தமாக 145 போட்டிகளில் விளையாடி 3,874 ஓட்டங்களையும், 92 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

சர்வதேச ரீதியில் அவுஸ்திரேலிய அணிக்காக 59 டெஸ்ட், 190 ஒருநாள் மற்றும் 58 இருபதுக்கு - 20 போட்டிகளில் விளையாடி வோட்சன், 2007 மற்றும் 2015 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய அவுஸ்திரேலிய அணியில் இடம்பிடித்திருந்தார்.

டெஸ்ட் போட்டிகளில் வொட்சன் 3731 ஓட்டங்களை எடுத்து 75 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 5,757 ஓட்டங்களை எடுத்து 168 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இருபதுக்கு - 20 போட்டிகளில் 1,462 ஓட்டங்களை எடுத்து 48 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் வொட்சன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35