மலையக பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பில் செந்தில் தொண்டமான் - கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கிடையில் கலந்துரையாடல்

Published By: Digital Desk 3

03 Nov, 2020 | 03:24 PM
image

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவின் கீழ் பெருந்தோட்டங்களில் அபிவிருத்தி செய்யப்படவுள்ள 9 பாடசாலைகளுக்கு 300 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வேலைத்திட்டத்தை உடனடியாக அமுல்படுத்துவது தொடர்பில் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலர் செந்தில் தொண்டமான் மற்றும் கல்வி  அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று அமைச்சில் நடைபெற்றது.

இதன்போது வேலைத்திட்டத்தை உடனடியாக அமுல்படுத்துவது தொடர்பிலான விளக்கத்தை செந்தில் தொண்டமான் அதிகாரிகளுக்கு வழங்கியதுடன், அதற்கான ஆவணங்களும் தயாரிக்கப்பட்டன.

அத்துடன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே, கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் தலைமையில் வேலைத்திட்டங்களுக்கான அடிக்கல் எதிர்வரும் ஓர், இரு மாதங்களில் நாட்டப்படும் எனவும் செந்தில் தொண்டமான் அமைச்சின் அதிகாரிகளிடம் விளக்கமளித்தார்.

பெருந்தோட்டப் பகுதிகளில் இந்திய அரசாங்கம் முன்னெடுத்துவரும் சேவைகளுக்கு இதன்போது செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

திருட்டு குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறுவர்கள்...

2024-04-18 13:21:31
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24