கல்வி அமைச்சின் தீர்மானம் !

03 Nov, 2020 | 07:27 AM
image

(எம்.மனோசித்ரா)

2020 கல்வியாண்டுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளை இம்மாதம் 9 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் , தற்போதுள்ள சூழலைக்கருத்திற் கொண்டு இரு வாரங்கள் தாமதாக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

நாட்டில் தற்போதுள்ள நிலைமையைக் கருத்திற்க் கொண்டு நவம்பர் 9 ஆம் திகதி மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து சுகாதார அமைச்சிடம் பரிந்துரைகளைக் கோரியுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்திருந்தார். அதற்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 9 ஆம் திகதி இரண்டாம் தவணை விடுமுறை வழங்கி இம்மாதம் 9 ஆம் திகதி மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு ஏற்கனவே கல்வி அமைச்சு தீர்மானித்திருந்தது.

எனினும் கம்பஹா மாவட்டத்தில் ஒக்டோபர் 4 ஆம் திகதி மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் கொவிட் தொற்றுக்குள்ளான பெண்ணொருவர் இனங்காணப்பட்டதையடுத்து ஒக்டோபர் 5 ஆம் திகதி முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31