இந்திய உயர்ஸ்தானிகராலய ஊழியருக்கு கொரோனா 

Published By: Digital Desk 4

02 Nov, 2020 | 08:33 PM
image

(எம்.மனோசித்ரா)

கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் பணியாற்றும் துணை ஊழியர் ஒருவருக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக உயர்ஸ்தானிகராலயம் உறுதிப்படுத்தியுள்ளது.

இன்று திங்கட்கிழமை இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தொற்றுக்குள்ளான குறித்த ஊழியர் தற்போது அரச வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவருகிறார். ஊழியரின் கடமைகளை கவனத்தில்கொள்ளும் போது அவர் உயர் ஸ்தானிகராலய கட்டடத்துடனும் அதிகாரிகளுடனும் குறைந்தளவிலான தொடர்பினையே கொண்டிருக்கும் நிலையில் முதன்மை தொடர்பாளர்கள் சுகாதார பாதுகாப்பு நியமங்களுக்கு அமைவாக பி.சி.ஆர் பரிசோதனை மற்றும் ஏனைய நடைமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

கொவிட்19 நிலைமையை கருத்தில்கொண்டு இந்திய உயர் ஸ்தானிகராலயம் மிகவும் குறைந்த வலுவுடன் கடந்த சில வாரங்களாக இயங்கி வருகிறது. இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருக்கும் வழிமுறைகளுக்கு அமைவாக அவசியமான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருக்கும் அதேவேளை உயர் ஸ்தானிகராலய வளாகம் முழுமையாக சுத்திகரிக்கப்பட்டுள்ளது.

கொவிட்19க்கு எதிரான போராட்டங்களில் சாத்தியமான சகல ஒத்துழைப்புக்களையும் இலங்கைக்கு வழங்குவதற்கும் உதவுவதற்கும் இந்தியா உறுதியுடன் உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40