கொரோனா தொற்றின் 2 ஆம் அலைக்கு அரசாங்கமே முழு பொறுப்பு - எதிர்க்கட்சி சாடல்

02 Nov, 2020 | 12:48 AM
image

(செ.தேன்மொழி)

அரசாங்கம் பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்காக முயற்சித்து வந்ததால் கொரோனா வைரஸ் பரவலின் முதலாம் அலை ஏற்பட்டிருந்ததுடன், 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்வது தொடர்பில் அரசாங்கம் கொண்டிருந்த அக்கறையின் காரணமாக தற்போது வைரஸ் பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா குற்றஞ்சாட்டினார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மூன்று தினங்களுக்குள் தொற்றாளர்கள் ஆயிரம் பேர் வரை அடையாளம் காணப்பட்டனர். 

இதனால் உடன் கம்பஹா மாவட்டம் முழுவதிலும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு நானும் ,எதிர்க்கட்சி தலைவர் சஜித்பிரேமதாசவும் பாராளுமன்றத்தில் தெரிவித்தோம்,கடந்த மாதம் 7 ஆம் திகதியே நாங்கள் இந்த வேண்டுகோளை விடுத்திருந்த போதிலும்,சுகாதார அமைச்சர் அதற்கு தற்போது அவசியமில்லை என்று எமது கோரிக்கையை நிராகரித்தார். 

எனினும் நாங்கள் எச்சரிக்கை செய்த போதே ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியிருந்தால் இன்று பேலியகொட கொத்தணி என்று ஒன்று உருவாகியே இருந்திருக்காது.

அரசாங்கம் ஆரம்பத்தில் பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்காக அக்கறைக் கொண்டு செயற்பட்டதன் காரணமாகவே கொரோனா வைரஸ் பரவலின் முதலாம் அலை ஏற்பட்டது. பின்னர் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்வதில் அக்கறை செலுத்தி வந்ததனால் தற்போது இரண்டாவது அலையும் ஏற்பட்டுள்ளது. 

எனினும் உரிய நேரத்தில் உரிய தீர்மானங்களை அரசாங்கம் எடுப்பதில்லை, அதன் காரணமாகவே வைரஸ் பரவல் தீவிரமாக பரவிவருகின்றது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார பிரிவு,இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரும் தொடர்ந்தும் கடுமையாக உழைத்து வருகின்றன போதிலும்,அரசியல் ரீதியிலான தலையீடுகளின் காரணமாகவே அதனை வெற்றிக் கொள்ள முடியாமல் உள்ளது.

இதேவேளை, வைத்தியசாலைகளில் போதிய இடவசதிகள் இல்லை என்று வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டும் சிலர்  ,அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விடயம் தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். 

வைரஸ் பரவலுடன் தற்போது மனித நேயமும் இல்லாமல் போயுள்ளது. பி.சீ.ஆர் பரிசோதனைக்காக ஒருவரை அழைத்துச் செல்லும் போது அவரை ஒரு பயங்கரவாதியை அழைத்துச் செல்வதை போன்றே அழைத்துச் செல்கின்றனர். 

இதன் காரணமாக விசேட தேவையுடைய இளைஞன் ஒருவன் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட அவனது தாயை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றதை அடுத்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளான். இதற்கு பிரதான காரணம் எம்மிடம் மனித நேயம் இல்லாமல் போயுள்ளமையே.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14