வெளிநாட்டு முதலீடுகளை எதிர்வரும் காலங்களில் 5 மடங்காக அதிகரிப்பதே அரசாங்கத்தின் இலக்காகும் என மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி  குறிப்பிட்டுள்ளார். 

தற்போதைய அரசாங்கத்தின் சிறந்த வெளிநாட்டுக் கொள்கையை பயன்படுத்தி சர்வதேசத்துடன் புதிய வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொண்டு முதலீட்டு சந்தர்ப்பங்களை அதிகரித்து ஏற்றுமதியை அதிகரித்து இலங்கையை பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீட்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையின் அபிவிருத்தி சவால்கள் என்ற தலைப்பில் நேற்று பிற்பகல் பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ஒரு விசேட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.