சந்தைகளை மூட நடவடிக்கை - நல்லூர் பிரதேச சபை தவிசாளர் 

Published By: Digital Desk 4

01 Nov, 2020 | 05:14 PM
image

சுகாதார நடைமுறைகளை, விதிகளை பின்பற்றாமல் அசண்டையீனமாக நடந்து கொண்டால் சந்தைகளை மூட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக நல்லூர் பிரதேச சபை தவிசாளர் த. தியாக மூர்த்தி தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

யாழில் உள்ள பிரதான சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலி சந்தை மற்றும் கொக்குவில் சந்தை ஆகியன நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்டது.

குறித்த சந்தைகளுக்கு தினமும் பெருமளவான மக்கள் வந்து செல்கின்றனர். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனோ தொற்று அபாயத்திலிருந்து மக்களை பாதுகாக்கும் முகமாக எமது ஆளுகைக்கு உட்பட்ட சந்தைகளில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் சந்தைக்கு வரும் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளையும் விதிகளையும் பின்பற்றுமாறு கோரி வருவதுடன் எமது சபையின் உத்தியோகஸ்தர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

இருந்த போதிலும் பெருமளவான வியாபாரிகள் , பொதுமக்கள் சுகாதார நடைமுறைகள் விதிகளை மீறி செயற்படுவதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று உள்ளன.

தொடர்ந்து இவ்வாறான செயற்பாடுகளில் வியாபாரிகள் , பொதுமக்கள் ஈடுபட்டால் எமது ஆளுகைக்குள் உள்ள திருநெல்வேலி சந்தை மற்றும் கொக்குவில் சந்தை என்பவற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04