ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று இரண்டு இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 20 பேர் பலியாகியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள தெஹ மஸங் சதுக்கத்தில் ஹசாரா சிறுபான்மையினர் மின்வழிப்பாதை திட்டத்தை மாற்றி அமைக்க வலியுறுத்தி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் குண்டுகள் வெடித்தன.

இந்த தாக்குதலில் 20 பேர் பலியானதாகவும், 160 பேர் காயமடைந்திருப்பதாகவும் உள்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இது தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.