அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றியாளரை கணித்த கரடி

Published By: Digital Desk 3

31 Oct, 2020 | 02:54 PM
image

ரஷ்யாவின் விலங்கியல் பூங்காவில் உள்ள சைபீரிய கரடி ஒன்று அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளரை கணித்துள்ளது.

அமெரிக்காவில் வருகிற நவம்பர் 3 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. 

இதனை முன்னிட்டு குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், சைபீரிய கரடி ஒன்று அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளரை கணித்துள்ளது.

இதுபற்றிய வீடியோ ஒன்றில்,

கூண்டில் இருந்து திறந்து விடப்பட்ட கரடியானது, ஒய்யார நடைநடந்து வெளியே வருகிறது.  அதற்கு முன் தயாராக இரண்டு தர்பூசணி பழங்கள் வைக்கப்பட்டு இருந்தன.  அவற்றில் ஒரு பழத்தில் தற்போதைய ஜனாதிபதி ட்ரம்பின் உருவமும், மற்றொன்றில் ஜோ பைடன் உருவமும் வரையப்பட்டிருந்தது. 

இதில், கரடி நேராக வந்து தன் முன்னேயிருந்த ஜோபைடன் உருவம் கொண்ட தர்பூசணியை தூக்கி சென்று மறைவாக அமர்ந்து சுவைத்தது.  இதனால் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெறுவார் என நம்பப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47