பொதுமக்கள் உரிய சுகாதாரப்பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் -  உலக சுகாதார ஸ்தாபனம்

31 Oct, 2020 | 03:09 PM
image

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் மிகவேகமாகப் பரவலடைந்துவரும் நிலையில், எங்களுடைய நடத்தைகளே நோய்த்தொற்றின் பரவல் வீதம் எவ்வாறு இருக்கப்போகிறது என்பதைத் தீர்மானிக்கும்.

எனவே பொதுமக்கள் உரிய சுகாதாரப்பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். சிறிய மாற்றத்தினால் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்த முடியும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியிருக்கிறது.

நாடளாவிய ரீதியில் மீண்டும் கொவிட் - 19 கொரோனா வைரஸ் மிகவேகமாகப் பரவிவரும் நிலையில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை அலுவலகம் அதன் டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருக்கும் குறுகிய காணொளியொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறது. அதனூடாக பொதுமக்களிடம் பின்வரும் விடயங்களைப் பின்பற்றுமாறு வலியுறுத்திருக்கிறது.

கொரோனா வைரஸ் மிகவேகமாகப் பரவலடைகின்றது. நோய்த்தொற்றின் பரவல் வீதம் எவ்வாறு இருக்கப்போகின்றது என்பதை எங்களுடைய நடத்தைகளே தீர்மானிக்கும்.

எனவே வைரஸ் தொற்றுப்பரவலைக் குறைப்பதற்காக உடல் நலக்குறைவாக உணர்ந்தால் வீடுகளிலேயே இருங்கள். கைகளை அடிக்கடி சவர்க்காரத்தைப் பயன்படுத்தி கழுவுவதுடன் மதுசாரம் கலந்த கை சுத்திகரிப்பானை பயன்படுத்துங்கள். முகக்கவசம் அணிவதுடன் ஏனையோருடன் குறைந்தபட்சம் ஒரு மீற்றர் இடைவெளியினைப் பேணுங்கள். விழிப்புடன் இருங்கள்.

சிறிய மாற்றத்தினால் பெரிய வித்தியாசத்தை உருவாக்க முடியும். இது எமது கடமை என்று அந்தக் காணொளியில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04