துருக்கி, கிரீஸ் நிலநடுக்கத்தில் சிக்கி 26 பேர் பலி

31 Oct, 2020 | 11:31 AM
image

துருக்கி மற்றும் கிரீஸ் நாடுகளை சக்திவாய்ந்த நில நடுக்கம் தாக்கியதில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

துருக்கியின் மேற்கில் கடலோரப் பகுதிகளில் 24 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கிரீஸ் தீவான சமோஸில் ஒரு சிறுவன் மற்றும் ஒரு பெண் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், துருக்கியில் இஸ்மீர் நகரில் 20 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.

17 கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியவர்களை  மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

நேற்று காலை 11.51 மணியளவில்  துருக்கியின் மேற்கு மாகாணமான  இஸ்மிரில்  இருந்து 16.54 கிலோ மீற்றர் ஆழத்தில் மையப்பகுதி செஃபெரிஹிசர் மாவட்டத்திலிருந்து 17.26 கிலோ மீற்றர் தூரத்தில்  7.0 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

குறித்த  நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 196 க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நில நடுக்கம் வட கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ்  நகரம் முதல் துருக்கியின் இஸ்தான்புல் நகரம் வரை உணரப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், பூகம்பத்திற்குப் பிறகு கிரேக்க பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் மற்றும் துருக்கிய ஜனாதிபதி தொலைபேசியில் பேசியதாக துருக்கியின் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது, இது கிரேக்கத்தையும் பாதித்தது.

"எர்டோகன் மற்றும் மிட்சோடாகிஸ் ஆகியோர் விரைவாக மீட்கப்படுவதற்கான விருப்பங்களை பரிமாறிக்கொண்டனர்" என்று ஜனாதிபதி ஒரு எழுத்துப்பூர்வ அறிக்கையில் அறிவித்தார்.

இந்நிலநடுக்கம் காரணமாக சுனாமி பேரலைகளும் தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 11:11:08
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21