அம்பாறை, திருக்கோவில் சாகாமம் பகுதியில் சேனைப்பயிர் செய்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களின் மீது இடி மின்னல் தாக்கியதில் கணவன் மற்றும் மனைவி உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (30) மாலை 6 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.
இவர்கள் இன்று மாலை சாகாமம் தேசிய நீர் வடிகால் சபை தண்ணீர் தாங்கிக்கு அருகாமையில் உள்ள தமது காணியில் சேனைப்பயிர் செய்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது மாலை 6 மணியளவில் கனத்த மழையுடன் ஏற்பட்ட இடடிமின்னல் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தில், திருக்கோவில் விநாயகபுரம் பழைய தபாலக வீதியைச் சேர்ந்த 46 வயதுடைய 3 பிள்ளைகளின் பெற்றோறே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த இருவரது சடலமும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்ப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM