அரசாங்கத்தின் கவனயீனத்தின் பிரதிபலனே கொரோனா இரண்டாம் அலை - ஐ.தே.க சாடல்

30 Oct, 2020 | 07:24 PM
image

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலையிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு முறையான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளாமல் வைரஸ் பரவலை முழுவதுமாகக் கட்டுப்படுத்தி வெற்றிகண்டுவிட்டதாகக் காண்பிப்பதற்கே அரசாங்கம் முயற்சி செய்து வந்ததாக ஐக்கிய தேசியக் கட்சி கடுமையாக சாடியிருக்கிறது.

 ஐக்கிய தேசிய கட்சி இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாவது:

நாடளாவிய ரீதியில் மீண்டும் ஆரம்பமான கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில் அரசாங்கத்தினால் காண்பிக்கப்பட்ட தாமதம் கடும் விசனமளிக்கிறது. கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலை குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்தினால் தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுவந்த நிலையிலும் கூட, அதிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு முறையான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளாமல் வைரஸ் பரவலை முழுவதுமாகக் கட்டுப்படுத்தி வெற்றிகண்டுவிட்டதாகக் காண்பிப்பதற்கே அரசாங்கம் முயற்சி எடுத்துவந்தது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு முறையான சட்டதிட்டங்களையும் மட்டுப்பாடுகளையும் வகுத்து, அவற்றை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வி கண்டிருக்கிறது. இதுவிடயத்தில் போதியளவான சட்டங்கள் வகுக்கப்படாமையானது வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைவதற்கு வழிவகுத்தன. பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னதாக நேற்று முன்தினம் வியாழக்கிழமை பெரும் எண்ணிக்கையானோர் மேல்மாகாணத்தைவிட்டு வெளியேறியமை இதற்கு சிறந்த உதாரணமாகும்.

கடந்த ஏப்ரல் மாதம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் இணைந்து பொதுமக்கள் சுகாதாரம் தொடர்பான அவசர சட்டமூலம் ஒன்றைத் தயாரித்து, அதனை அரசாங்கத்திடம் கையளித்தனர். எனினும் அதன்படி செயற்படுவதற்கு அரசாங்கம் தவறிவிட்டது.

அதேபோன்று கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதைக் கண்டறிவதற்கான இயந்திரம் செயலிழந்துள்ளமையும் வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

தற்போது பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகளைப் பெற்றுக்கொள்வதற்கு 5 நாட்களுக்கும் அதிகமான காலம் தேவைப்படுவதுடன் இது பொதுமக்களின் சுகாதாரப்பாதுகாப்பில் மாத்திரமன்றி, நாட்டின் பொருளாதார செயற்பாடுகளிலும் பாரிய பாதிப்பைத் தோற்றுவிக்கும்.

தேவையற்ற தாமதத்தைத் தடுக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் போதுமானளவிற்கு பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரங்கள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். 

அதுமாத்திரமன்றி வைத்தியாசாலைகளில் படுக்கை வசதிகள் மற்றும் செயற்கை சுவாசக்கருவிகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை குறித்தும் கவனம் செலுத்தவேண்டியுள்ளது. எனவே இந்த வைரஸ் பரவலின் இரண்டாம் அலையிலிருந்து நோயாளர்களைப் பாதுகாப்பதற்கு ஏற்றவகையில் வைத்தியசாலைகளின் இயலுமையை உயர்த்துவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும். 

கொரோனா வைரஸ் பரவலினால் ஏற்பட்டிருக்கும் தற்போதைய நெருக்கடி நிலை மீது உயர் கவனம் செலுத்துவதுடன் மக்களின் சுகாதாரப்பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பை சரிவர நிறைவேற்றுமாறு நாம் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04