ஆணழகருக்கான போட்டி : வடக்கிலிருந்து 12 வீரர்கள் பங்கேற்பு

Published By: Priyatharshan

11 Dec, 2015 | 10:21 AM
image

2015ஆம் ஆண்­டுக்­கான ஆண­ழ­க­ருக்­கான போட்டி எதிர்­வரும் ஞாயிற்­றுக்­கி­ழமை கொழும்பு ஆனந்த கல்லூரி குலரத்ன மண்டபத்தில் நடை­பெ­ற­வுள்­ளது.

தொடர்ந்து 68ஆவது தட­வை­யாக நடை­பெ­ற­வுள்ள ஆண­ழகர் போட்­டி­க­ளுக்கு இம்­முறை மொத்தம் 140 வீரர்கள் பங்­கு­­பற்­ற­கின்­றார்கள். வடக்­கி­லி­ருந்து 12 வீரர்கள் பங்­கு­பற்­ற­வுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

மிஸ்டர் ஸ்ரீலங்கா என்ற பெயரில் நடத்­தப்­படும் ஆண­ழ­க­ருக்­கான போட்­டிகள் குறித்து உத்­தி­யோ­ கப்­பூர்­வ­மாக அறி­விக்கும் நிகழ்வு நேற்­று­முன்­தினம் நடை­பெற்றது.

இந்­நி­கழ்வில் இலங்கை பொடி­பில்டிங் சம்­மே­ள­னத்தின்தலைவர் கித்­சிறி பெர்­னாண்டோ பேசு­கையில்,

68 வருட பழ­மை­வாய்ந்த எமது சம்­மே­ள­னத்தின் 2015ஆம் ஆண்­டுக்­கான ஆண­ழ­க­ருக்­கான போட்­டியில் நாடு­மு­ழு­வ­தி­லி­ருந்தும் வீரர்கள் பங்­கு­பற்­று­கி­றார்கள். குறிப்­பாக வடக்­கி­லி­ருந்து 12 வீரர்கள் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.

இது எமது சம்­மே­ளத்­திற்கு கிடைத்த மிகப்­பெ­ரிய வெற்றி­யாகும். வருடா வருடம் மேம்பட்­டுக்­கொண்டே செல்லும் எமது இந்தப் போட்­டிகள் இம்­முறை மேலும் விஸ்­த­ரிக்­கப்­பட்­டுள்­ளன.

இந்தப் போட்­டியில் முத­லிடம் பெறும் வீர­ருக்கு ஆண­ழகர் பட்­டமும் ஒரு இலட்சம் ரூபா பணப்­ப­ரிசும் வழங்­கப்­ப­ட­வுள்­ளன. அதேபோல் இளை­யோ­ருக்­கான போட்­டி­களும் நடை­பெ­ற­வுள்­ளது. இது­மட்­டு­மன்றி பிரபலங்களின் ஆணழகர் போட்டிகளும் நடத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இப்போட்டிகளுக்கு இலங்கை லொத்தர் சபை அனுசரணை வழங்குகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35