2035 வரை இவரே சீன ஜனாதிபதி

Published By: Digital Desk 3

30 Oct, 2020 | 04:14 PM
image

தற்போதைய சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மேலும் 15 ஆண்டுகள் (2035 வரை) ஜனாதிபதி  பதவியில் தொடருவதற்கு அந்நாட்டில் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒப்புதல் அளித்துள்ளது.

சீனாவில் ஒரு கட்சி ஆட்சிமுறை நடைபெற்று வருகிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆண்டு மாநாடு பீஜிங்கில் கடந்த 4 நாட்களாக நடைபெற்றது.

இதில் கம்யூனிஸ்ட் கட்சியின் 198 மத்திய குழு உறுப்பினா்கள், 166 மாற்று உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

இதில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு சாா்பில் மத்திய குழு உறுப்பினா்கள், ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் செயல்பாடுகளை மதிப்பிட்டனா்.

தொடா்ந்து அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஷி ஜின்பிங் சீனாவின் ஜனாதிபதியாக பதவி வகிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும், 14 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்துக்கும் (2021-2025) ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில், உள்ளூா் சந்தையை மேம்படுத்தி பொருளாதாரத்தை தொடா்ந்து வளா்ச்சிப் பாதையில் செலுத்துவதற்கான திட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

ஏற்றுமதியை அதிகம் நம்பியிருக்காமல், உள்நாட்டு நுகா்வு மூலம் நாட்டின் பொருளாதார கட்டமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஐந்தாண்டுத் திட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இது சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் முன்வைத்த முக்கிய யோசனை என்றும் தெரிய வந்துள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனா் மா சேதுங்கிற்குப் பிறகு கட்சியின் அதிகாரமிக்க தலைவராக ஷி ஜின்பிங் இப்போது வளா்ந்துள்ளாா்.

ஜனாதிபதி பதவி தவிர, கட்சியின் பொதுச் செயலா் பதவி, இராணுவத்தின் தலைமைப் பதவி ஆகியவற்றையும் அவரே வைத்துள்ளாா்.

ஆயுள் முழுவதும் அவா் தான் இப்பதவிகளில் இருப்பாா் என்று தெரிகிறது. ஏனெனில், இப்போது வழங்கப்பட்டுள்ள 15 ஆண்டுகள் முடியும் போது அவருக்கு 82 வயதாகும். அதற்கு முன்னதாகவே அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படவே அதிக வாய்ப்புள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு சீன ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற ஷி ஜின்பிங்கின் இரண்டாவது பதவிக் காலம் வரும் 2022 இல் முடிவடைய இருந்தது. ஆனால், இப்போது மீண்டும் 15 ஆண்டுகளுக்கு பதவியில் தொடரும் வாய்ப்பைப் பெற்றுள்ளாா்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாஜக கூட்டணியில் இணைந்தது பாமக…. தொகுதி...

2024-03-19 15:15:41
news-image

ஹமாஸின் 3 ஆவது உயர் தலைவர்...

2024-03-19 13:25:56
news-image

பங்களாதேஸ், பாக்கிஸ்தான், இந்தியாவில் வளிமாசடைதல் மிகவும்...

2024-03-19 14:52:25
news-image

காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை...

2024-03-19 10:56:07
news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47