200 நாட்களாக யாருக்கும் தொற்று இல்லை : வெற்றி களிப்பில் தாய்வான்!

Published By: Jayanthy

30 Oct, 2020 | 12:38 AM
image

தாய்வானில் இறுதியாக கொரோனா தொற்றாளர் அடையாம் காணப்பட்டு 200 நாட்கள் கடந்துள்ளதாகவும் கொரோானா தொற்றை கட்டுபடுத்துவதில் தாய்வான் சிறப்பாக செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

People wear face masks to protect against the spread of the coronavirus as they walk through a shopping district in Taipei, Taiwan today

தாய்வானில் இறுதியாக  ஏப்ரல் 12 அன்று  கொரோனா தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டதையடுத்து இதுவரை யாருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என அந்நாட்டு நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் இந்த வெற்றியை குறிப்பிட்டு, பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர், அதே நேரத்தில் மக்களை தொடர்ந்து முகக்கவசம் அணியவும், அடிக்கடி கைகளைக் கழுவவும் வலியுறுத்தியுள்ளனர்.

இதுவரை அந்நாட்டில் 553 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். மேலும் தொற்றுநோய் காரணமாக 7 மரணங்கள் பதிவாகியுள்ளன.

People wear face masks to protect against the spread of the coronavirus as they ride the subway in Taipei, Taiwan last month

எனினும் தாய்வான் உள்நாட்டு பரிமாற்றத்தை நிறுத்தியுள்ள நிலையில், வெளிநாட்டிலிருந்து வரும் மக்களிடையே புதிய கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகின்றனர்.

எவ்வாறாயினும், தாய்வானை விட்டு வெளியேறிய பின்னர் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படும்  நபர்களின் அறிக்கைகளை அடுத்து தாய்வான் உண்மையிலேயே கொரோனா வைரஸிலிருந்து விடுபட்டதா என்ற கேள்விகளும் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47