சர்வதேச பக்கவாத தினம்

Published By: Digital Desk 4

29 Oct, 2020 | 06:04 PM
image

உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் ஒக்டோபர் 29 ஆம் திகதியன்று சர்வதேச பக்கவாத தினம் கடைபிடிக்கப்படுகிறது. பக்கவாத நோயைத் தடுப்பது, அதற்கு சிகிச்சையளிப்பது தொடர்பாக விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்துவதே இன்றைய தினத்தின் பிரதான நோக்கம்.

பக்கவாதத்தால் உலகம் முழுவதும் இருபது மில்லியன் மக்கள் ஆண்டுதோறும் பாதிக்கப்படுகிறார்கள். மூளைக்கு செல்லும் இரத்தக்குழாய்களில் இரத்த கசிவு, இரத்தவோட்டத்தில் தடை, மூளையிலுள்ள இரத்த குழாய்களில் அடைப்பு போன்ற காரணங்களில் பக்கவாதம் ஏற்படுகிறது. விளக்கமாக சொல்லவேண்டும் என்றால், இரத்த குழாய்களின் வழியாக மூளைக்கு கிடைக்கவேண்டிய ஓட்சிஜன் மற்றும் சத்துக்கள் கிடைக்காததால் அதனுடன் தொடர்புடைய உடலுறுப்புகள் செயலற்றதாகிவிடுகின்றன.

அதாவது வலது இடது என இரண்டு பக்க மூளைக்குச் செல்லும் இரத்தகுழாய்களில் அடைப்பு அல்லது தடை ஏற்படும் போது, அதனுடைய கட்டுப்பாட்டிலுள்ள வலது மற்றும் இடது பக்க உடலுறுப்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன.

இரத்த அழுத்தம், நீரிழிவு, நரம்புத்தளர்ச்சி, இதய நோய், பாரம்பரிய மரபணு, மது மற்றும் புகைப்பழக்கம், உடற்பயிற்சியின்மை, உணவுக்கட்டுப்பாட்டின்மை, மன அழுத்தம் போன்ற காரணங்களால் தான் மூளை பகுதியிலுள்ள இரத்த குழாய்கள் பாதிக்கப்படுகின்றன. இதனை தவிர்க்கவேண்டும் என்றால், சத்துள்ள சரிசமவிகித உணவு, உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை பின்பற்றவேண்டும்.

பக்கவாத பாதிப்பு ஏற்பட்டவர்கள் கோல்டன் ஹவர்ஸ் எனப்படும் காலஅவகாசத்திற்குள் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சைப் பெற்றால், அவர்களை பக்கவாத பாதிப்பிலிருந்து முழுமையாக மீட்கலாம். சிலருக்கு சிகிச்சையுடன் இயன்முறை மருத்துவ பயிற்சியையும் மேற்கொள்ளவேண்டியதிருக்கும்.

டொக்டர் கோட்டீஸ்வரன்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29