சுறா தாக்குதலில் கையை இழந்த சிறுவன் : தாய்க்கு பலத்த காயம்

Published By: Digital Desk 3

29 Oct, 2020 | 05:25 PM
image

எகிப்தில் செங்கடலுக்கு அருகிலுள்ள  ஷர்ம் எல்-ஷேக்  நகரத்திலுள்ள சுற்றுலாத்தளத்திற்கு அருகில் கடல் பகுதியில் சுறா மீனின் தாக்குதலில் 12 வயதுடைய சிறுவன் கையை இழந்துள்ளதோடு,  அவரது தாய் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

எகிப்தில்  கடந்த  ஞாயிற்றுக்கிழமை ராஸ் முகமது தேசிய பூங்கா அருகில் கடல் பகுதியில் நீந்திக் கொண்டிருந்தபோதே உக்ரேனிய சுற்றுலாப் பயணிகள் சுறாவால் தாக்கப்பட்டனர் என்று உக்ரைனின் சுற்றுலா மேம்பாட்டு அரசு நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகள் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தாய்க்கு ஆழமான கடித்த காயங்கள் இருந்தன. அதேநேரத்தில் குழந்தையின் முழங்கைக்குக் கீழே உள்ள மேல் மூட்டு துண்டிக்கப்பட்டு முதுகில் ஆழமான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷர்ம் எல்-ஷேக் ராஸ் முகமது தேசிய பூங்கா நீர் சவாரி அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் இரண்டு உக்ரேனிய சுற்றுலா பயணிகள் மற்றும் ஒரு சுற்றுலா வழிகாட்டி உட்பட ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

ஓசியானிக் வைட்டீப்  என்ற சுறாவே தாக்குதல் நடத்தியுள்ளது. இது இரண்டு மீற்றர் நீளம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சுறா தாக்குதலை விசாரிக்க நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சரால் ஒரு பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடந்த பகுதியில் நீருக்கடியில் படமாக்கப்பட்ட ஒரு வீடியோ சுறாவின் "மனிதர்களுக்கு எதிரான விரோதப் போக்குகளால் வகைப்படுத்தப்படும் அசாதாரண நடத்தையை"  காட்டுவதாக அல் அஹ்ரம் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இவ்வருடம் 2020 ஆம் ஆண்டில் 17 முதல் 63 வயதுக்கிடைப்பட்ட எட்டு ஆண்களும் ஒரு பெண்ணும் சுறாக்களால் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13