கேள்விகளுக்கு பதிலளிக்க அமைச்சர்கள்   பிரசன்னமாகாமை தொடர்பில் சபையில் விசனம்  

Published By: MD.Lucias

23 Jul, 2016 | 09:43 AM
image

அரசியல் கட்சித் தலைவர்களால் எழுப்பப்படும் தேசிய முக்கியத்துவம்  வாய்ந்த விசேட  வினாக்களுக்கு  பதிலளிப்பதற்கு  அமைச்சர்கள் சபையில் பிரசன்னமாகாமை பாராளுமன்றத்தை  அவமதிக்கும்  செயலென சபையில் ஆளும், எதிர் தரப்புக்களால் கடுமையான விமர்சனம் செய்யப்பட்டது. 

பாராளுமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால  தலைமையில்  ஆரம்பமானது. வாய்மூல விடைக்கான  நேரத்தினை தொடர்ந்து நிலையியற் கட்டளை 23 இன் கீழ் இரண்டு விசேட வினாவை  எழுப்புவதற்கான நேரத்தில் எதிர்க்கட்சி  பிரதம கொறடாவும் ஜே.வி.பி தலைவருமான  அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. 

திருகோணமலையில் அமைக்கப்படும் எண்ணெய் தாங்கிகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் தற்போதைய ஒப்பந்தக்காரர்களிடமிருந்து பெறப்பட்டு இந்திய நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா என இந்த சபையில் நேற்று (நேற்று முன்தினம்)  கேள்வியெழுப்பப்பட்டது. . அதற்கு பெற்றோலிய வளத்துறை அமைச்சர் இன்று (நேற்று)  பதிலளிப்பதாக கூறியிருந்தார்.  ஆனால் இன்று  அமைச்சர் சபையில் இல்லை. 23 இன் கீழ் இரண்டு  கீழான வினாக்கள் தேசிய  முக்கியத்துவம்  வாய்ந்தவை. அதற்கு  பதிலளிப்பதற்கு அமைச்சர்கள் இல்லாமையானது பாராளுமன்றத்தை  அவமதிக்கும் செயலாகும். அமைச்சர்கள் மிகப்பெறுமதியான பெரிய வாகனங்களை கோருகின்றனர். அவ்வாறு வாகனங்களை கோருவதற்கு சபைக்கு ஒழுங்காக சமூகமளிக்க வேண்டுமல்லாவா? 10.30 இற்கு பாராளுமன்றம் என்றால் 12.30 வருகின்றார்கள். சில நிமிடங்களில் காணாமல் போய்விடுகின்றார்கள். சபை முதல்வர் இது தொடர்பாக   கவனம் செலுத்த வேண்டும். நான் கேள்வியெழுப்பிய திருகோணமலை எண்ணெய்  தாங்கி விடயத்திற்கு அமைச்சர் பதிலளிக்கும் போது ஒப்பந்தம்  சிலவேளைகளில் வழங்கப்பட்டு முடிவடைந்தும் இருக்கலாம். ஆகவே  அமைச்சர்கள் அவர்களுக்கான பொறுப்புக்களை ஒழுங்காக செய்யவேண்டும்.  இதனை  சபைமுதல்வர் கருத்திற் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

இதனையடுத்து எழுந்த சபை முதல்வரும் அமைச்சருமான லக் ஷ்மன் கிரியெல்ல, இந்த விடயம் சம்பந்தமாக ஜனாதிபதி, பிரதமர் கூட்டங்களில் அடிக்கடி வலியுறுத்தியிருக்கின்றனர். அமைச்சர்கள் சபையில்  பிரசன்னமாகி வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டுமென  வலியுறுத்துகின்றனர். ஆனால் அமைச்சர்கள்  பிரசன்னமாகாத நிலைமை தொடர்கின்றது.  அது பாராளுமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். 23 இன் கீழ் இரண்டு  வினாக்களுக்கு பதிலளிக்கின்றமை தொடர்பாக அறிக்கையொன்றை  பெறவுள்ளேன். அதன் மூலம் இந்த விடயத்திற்கு உரிய பதிலளிக்கின்றேன். அநுரகுமார எம்.பி.யின் கருத்தை  ஏற்றுக்கொள்கின்றேன் என்றார். 

அதன்போது குறுக்கீடு செய்த அநுரகுமார எம்.பி. அமைச்சர்கள் பாராளுமன்றத்தை கொச்சைப்படுத்துகின்றார்கள். தயவு செய்து இவ்வாறான செயற்பாடுகள் தொடர்வதை நிறுத்த வேண்டும். பாராளுமன்றத்தின் கெளரவம் பாதுகாக்கப்பட வேண்டும். தேசியமும் இடத்துவமும் வாய்ந்த வினாக்களே எழுப்பப்படுகின்றன என மீண்டும் சுட்டிக்காட்டினார். 

அதன் போது எழுந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒன்றிணைந்த  எதிர்க்கட்சி எம்.பி.யான வாசுதேவ நாணயக்கார இதனை  வெறுமனே  பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமையாக கருதமுடியாது.  இந்த பாராளுமன்றத்தின் கூட்டுப்பொறுப்பு என்று குறிப்பிட்டார்.   அதனையடுத்து பிரதி சபாநாயகர் இவ்விடயம் தொடர்பில் சபை முதல்வர் கவனம் செலுத்துவதாக கூறியுள்ளார் என்றும்  அது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படும் எனவும் கூறினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55