சேவல் தாக்கி பொலிஸ் அதிகாரி பலி - பிலிப்பைன்ஸில் சம்பவம்

Published By: Vishnu

28 Oct, 2020 | 10:48 AM
image

பிலிப்பைன்ஸின் வடக்கு சமர் மாகாணத்தில் சட்டவிரோதமாக நடத்தப்பட்ட சேவல் சண்டை மீதான சுற்றிவளைப்பின்போது சேவல் தாக்கி பொலிஸார் அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார்.

சேவல் சண்டை என்பது பிலிப்பைன்ஸில் முன்னெடுக்கப்படும் பிரபல்யமான விளையாட்டாகும். போட்டியின்போது நிர்ணயிக்கப்படும் பந்தயங்கள் மூலமாக பணமும் சம்பாதிக்கப்படுகிறது.

பந்தயத்தில் பறக்கவிடப்படும் சேவல்களின் கால்விரல்களுக்கு நடுவே கூர்மையான பிளேட் போன்ற ஆயுதங்களும் கட்டடுப்படுகிறது.

இந் நிலையில் கொரோனா அச்சம் காரணமாக பிலிப்பைன்ஸில் சேவல் சண்டை உட்பட ஏனைய விளையாட்டுகளுக்கும், நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த தடை உத்தரவுகளையும் மீறி வடக்கு சமர் மாகாணத்தின் ஜோஸ் நகரில் கடந்த திங்கட்கழமை சட்டவிரோதமாக சேவல் சண்டை நடத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்தை சுற்றி வளைத்துள்ளனர். இதன்போது எதிர்பாராத விதமாக சேவல் ஒன்று பொலிஸ் அதிகாரியை தனது காலில் கட்டப்பட்ட கூர்மையான பிளேட்டினால் தாக்கியுள்ளது.

இதனால் கடும் காயத்துக்குள்ளான அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த மாகாண பொலிஸ்துறை தலைவர்,

இது ஒரு துரதிர்ஷ்டவசமான விபத்து, இது தொடர்பில் தனக்கு முதலில் முறைப்பாடு அளிக்கப்படடபோது என்னால் இதை நம்ப முடியவில்லை.

ஒரு பொலிஸ் அதிகாரியாக 25 ஆண்டுகளில் ஒரு சேவலினால் தாக்கப்பட்டு ஒரு மனிதன் உயிரிழந்தமை இது முதல் சந்தர்ப்பமாகும் என்றார்.

பொலிஸாரின் இந்த சுற்றிவளைப்பின்போது மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 7 சண்டை சேவல்களும், 550 பிலிப்பைன்ஸ் பெசோவும் ($11; £8) பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17