மூன்று பகுதிகளில் ரயில்களில் பயணிக்க தடை - புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம்

Published By: Digital Desk 3

28 Oct, 2020 | 11:00 AM
image

பாணந்துறை,மொரட்டுவ மற்றும் ஹோமாகமவில் நேற்று தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ளவர்கள்  மறு அறிவித்தல் வரும் வரை களனிவெளி மற்றும் கடலோரப் பாதைகளில் இயங்கும் ரயில் சேவைகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் (SLRSMU) தெரிவித்துள்ளது.

பாணந்துறை,ஹோமாகம,ஹோமாகம வைத்தியசாலை மற்றும் மாகும்புர உப ரயில் நிலையங்கள் உள்ளிட்ட களனிவெளி ரயில் பாதையில் மீகொடவிலிருந்து கொட்டாவ வரை ரயில்  நிலையங்களை பயன்படுத்துபவர்களுக்கு ரயில் சேவைகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படாது என தெரிவித்துள்ளது.

வாதுவையிலிருந்து அங்குலானா ரயில் நிலையங்களுக்கு பின்வத்த, பாணந்துறை, எகட உயன, கொரலவெல்ல, மொரட்டுவ மற்றும் லுனவ  உப ரயில் நிலையங்கள் உள்ளிட்ட கடலோர பாதையில் இயங்கும் ரயில்களை மக்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை என இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் (SLRSMU) தெரிவித்துள்ளது.

இந்நிலையில், க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற உதவி ஊழியர்கள் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் ரயில் சேவைகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55