ரிஷாத்தின் பிணை கோரிக்கை நிராகரிப்பு - 2 ஆம் சந்தேகநபரை பரிசோதனைகளுக்கு உட்படுத்த உத்தரவு!

27 Oct, 2020 | 07:38 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் அமைச்சரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனின் பிணை கோரிக்கையை நிராகரித்த கோட்டை நீதிவான் பிரியந்த  லியனகே அவரை எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தர்விட்டார்.

நடந்து முடிந்த 2019 ஜனாதிபதித் தேர்தலின் போது, புத்தளத்தில் இருந்து 222 இ.போ.ச. பஸ்களில் 12 ஆயிரம் இடம்பெயர்ந்த  வாக்காளர்களுக்கு சிலாவத்துறை பகுதிக்கு, வாக்களிக்கச் செல்ல போக்குவரத்து வசதிகளை செய்துகொடுத்தமை ஊடாக, நீண்டகாலமாக இடம்பெயர்ந்தோரை மீளக் குடியமர்த்துவதர்கான திட்டத்தின் 9.5 மில்லியன் ரூபாவை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டம் மற்றும் ஜனாதிபதி ஒருவரை தேர்ந்தெடுப்பது குறித்த சட்டங்களின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போதே நீதிவான் குறித்த கோரிக்கையை நிராகரித்தார்.

இதன்போது இந்த விவகாரத்தில் 2 ஆம் சந்தேக நபரான சம்சுதீன் மொஹம்மட் யாசீன்  தொடர்பில் முன்வைக்கப்பட்டிருந்த பிணை கோரிக்கையின் தீர்மானத்தை ஒரு வார காலத்துக்கு ஒத்தி வைத்த நீதிவான், அவரை இன்று கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர் செய்யுமாரும் அந்த அறிக்கையின் பின்னர் அவரது பிணை கோரிக்கை தொடர்பில் முடிவெடுப்பதாகவும் அறிவித்தார். 

எனினும் 3 ஆவது சந்தேக நபரான கணக்காளர் மனோ ரஞ்சனின் பிணை கோரிக்கையினையும் நீதிமன்றம் நிராகரித்தது. இந் நிலையில் ரிஷாத் உள்ளிட்ட மூன்று பேரின் விளக்கமறியல் காலத்தையும் மேலும் 14 நாட்களுக்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் நீடித்தது.

 இன்றைய  தினம் இந்த விவகாரம் குறித்த வழக்கு விசாரணைகள் கோட்டை நீதிவான் நீதிமன்றில் கடும் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ரிஷாத் உள்ளிட்ட சந்தேக நபர்கள் மன்றுக்கு அழைத்து வரப்படவில்லை.

ரிஷாத் பதியுதீன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்னவும், மொஹம்மட் யாசீன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரனி அனில் சில்வாவும், மனோரஞ்சன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசாவும் மன்றில் ஆஜராகினர்.

 சி.ஐ.டி. சார்பில் பொலிஸ் அத்தியட்சர்  மொஹான் சிறிவர்தனவின் கீழ் பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் நிரோஷினி மன்றில் ஆஜரானார். அவர்களுடன் சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் மன்றில் முன்னிலையானார்.

இதன் போது ரிஷாத் பதியுதீனுக்கு  அமைச்சின் பொறுப்புக்களை வழங்கிய வர்த்தமானி அறிவித்தல், நீண்டகாலமாக இடம்பெயர்ந்தோரை மீளக் குடியமர்த்துவதற்கான திட்டம் உருவாக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம் ஆகியவற்றினையும், ரிஷாத் சார்பில் முன்வைக்கப்பட்டிருந்த விடயங்கலையும் ஒன்றாக வைத்து  ஆராய்ந்த நீதிவான் பிரியந்த லியனகே, முன்னாள் பிரதமர், முன்னாள் நிதி அமைச்சர்களுக்கு எழுதபப்ட்ட கடிதங்கள்,  மற்றும் அவர்கள் தரப்பிலிருந்து கிடைக்கப்பெற்ற பதில்களையும் ஆராய்ந்தார்

அத்துடன் விசாரணையாளர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அமைச்சின் செயலராக செயர்பட்ட நீல் ரஞ்சனின் வாக்கு மூலத்தையும்  ஆராய்ந்த நீதிவான்,

' குடிமகனின் வாக்குரிமையை  உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமை. எனினும்   சட்டத்துக்கு விரோதமாக அதனை முன்னெடுக்க அரசாங்கத்துக்கு அதிகாரம் இல்லை' என தனது பிணை தொடர்பிலான தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.

 அத்துடன் இந்த செயற்பாடு மோசடி சிந்தனையில் புரியப்பட்டது அல்ல எனவும்,  இதனால் யாருக்கும் எந்த நட்டமும் ஏற்படவில்லை எனவும், இந் நடவடிக்கையில் ஒரு அரச நிறுவன பணம் இன்னொரு அரச நிறுவனத்திலேயே சில நாட்கள் பிணையாக வைக்கப்பட்டிருந்துள்ளது போன்ற சந்தேக நபர் தரப்பு வாதங்களை ஆராய்ந்த நீதிவான்,  குற்றமொன்று  இங்கு இடம்பெறவில்லை என்ற சந்தேக நபர் தரப்பின் வாதங்களை நிராகரித்தார்.

அத்துடன் இந்த பிணை தொடர்பில் ஆராயும் போது, சி.ஐ.டி. சந்தேக நபரைக் கைது செய்ய தேடிய போது, அவர் 6 நடகள் மறைந்திருந்த விடயத்தையும் ஆராய்ந்ததாக நீதிவான் குறிப்பிட்டார்.

 இந் நிலையிலேயே பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் பிணை வழங்க வேண்டுமானால், நீதிவான் நீதிமன்றுக்கு விஷேட காரணிகள் முன்வைக்கப்பட வேண்டும் என சட்ட ரீதியிலான வழிகாட்டல்கள் உள்ள நிலையில், அது தொடர்பில் நீதிவான் ஆராய்ந்தார். ரிஷாத் பதியுதீனுக்கு விஷேட காரணிகள் இல்லை என்பதை சுட்டிக்கடடிய நீதிவான் 3 ஆம் சந்தேக நபர் மனோரஞ்சன் முன்வைத்த முழங்காலில் செய்யப்பட்ட சத்திரசிகிச்சையை விஷேட காரணியாக ஏற்க நீதிவான் மறுத்தார். 

2 ஆம் சந்தேக நபர் தனக்கு செய்யப்பட்ட இருதய அறுவை சிகிச்சை தொடர்பில்  மருத்துவ அறிக்கையை அமர்ப்பித்துள்ள நிலையில் அதனை சுயாதீன மருத்துவ அறிக்கை ஊடாக உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்ட நீதிவான், அவரை இன்று கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர் செய்ய சிரைச்சாலைகள் ஆணையாளருக்கு கட்டளையிட்ட நிலையில், அவ்வறிக்கை கிடைத்த பின்னர் அவரது பிணை  தொடர்பில் தீர்மனைப்பதாக அரிவித்து வழக்கை எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து அதுவரை சந்தேக நபர்களின் விளக்கமறியல் காலத்தை நீடித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33