மரண வீட்டுக்குச் சென்ற கொரோனா நோயாளி - மரண நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் தனிமைப்படுத்தல்

Published By: Digital Desk 4

27 Oct, 2020 | 06:17 PM
image

கொரோனா தொற்று உறுதியான ஒருவர் பதுளைப்  ஸ்பிரிங்வெளி – மேமலை பெருந்தோட்டத்தின் மரண வீடொன்றிற்கு சென்று வந்ததையடுத்து அம்மரண நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் தனிமைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவில் வீதி திருத்தப்பணி ஊழியர்கள் இருவர் தனிமைப்படுத்தல் |  Virakesari.lk

மேமலை பெருந்தோட்டத்தில் கணேசன் முத்தம்மாள் என்ற 69 வயது பெண் கடந்த 25- 10-2020 அன்று உயிரிழந்ததையடுத்து அவரது இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்ள ஹட்டனிலிருந்து எஸ். சிவராஜா என்ற நபர் சென்றுள்ளார். 

இவர் பேலியகொடை மீன் சந்தையில் தொழில் செய்து வந்தவராவார். மேற்குறிப்பிட்ட இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்ட குறித்த நபர் மீளவும் ஹட்டன் சென்றதும் அவர் மீது சந்தேகம் கொண்ட ஹட்டன் பொலிசாரும் சுகாதாரப் பிரிவினரும் அந்நபரை பி.சி.ஆர். பரிசோதனைக்குற்படுத்தினர். அப் பரிசோதனையில் குறித்த நபருக்கு “கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து குறித்த நபருடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரையும் சுகாதாரப் பிரிவினருக்கு அறிவிக்கும்படி பொலிசார் கேட்டுள்ளனர். இத்தகவல் பதுளைப் பொலிசாருக்கு கிடைக்கவே பொலிசாரும், பதுளை சுகாதாரப் பிரிவினரும் நேற்று 26 -10 -2020  மேற்படித் தோட்டத்திற்கு விரைந்துள்ளனர்.  குறித்த மரண வீட்டில் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்ட அனைவரையும் தனிமைப்படுத்தி, பி.சி.ஆர். பரிசோதனைக்குற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். 

அத்துடன், அத்தோட்டத்திற்குள் வெளியார் எவரையும் பிரவேசிக்கவோ  இத்தோட்டத்திலுள்ளவர்கள் வெளியில் செல்லாதிருப்பதற்கும் பூரண தடை விதிக்கப்பட்டுள்ளது.

பதுளைப் பொலிசாரும், பதுளை சுகாதாரப் பிரிவினரும் இணைந்தே மேற்படி வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். .

இந்நிலையில் பதுளை – மேமலை பெருந்தோட்டம் போன்றே பதுளை – ரொசட் பெருந்தோட்டப் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08