அரசியலமைப்பு திருத்தத்தில் பௌத்த  தர்மத்துக்கு எந்தப்பாதிப்பும் ஏற்படாது

Published By: MD.Lucias

22 Jul, 2016 | 10:17 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

அரசியலமைப்பு திருத்தத்தின்போது பௌத்த தர்மத்துக்கு எந்தப்பாதிப்பும் ஏற்பட இடமளிக்க மாட்டோம். அத்துடன் இன, மத பேதங்களை மறந்து ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்கத்துடன் செயற்படுவதற்கு காலம் கனிந்துள்ளது என துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் அர்ஜன ரணதுங்க தெரிவித்துள்ளார்

களுத்துறை பயாகல பிரதேசத்தில் இன்று  நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் இன்று பாரியளவில் பேசப்படுகின்றது. இந்த அரசியலமைப்பு திருத்தத்தின் போது பௌத்த தர்மத்துக்கு இருக்கும் முன்னுரிமைகள் இல்லாமலாக்கப்போவதாக சிலர் தெரிவிக்க முயற்சிக்கின்றனர். ஆனால் அரசியலமைப்பில் எந்த திருத்தம் வந்தாலும் பௌத்த தர்மத்துக்கு இருக்கும் அந்தஸ்தில் கடுகளவேனும் பாதிப்பு ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் இடமளிக்காது என ஜனாதிபதி தெரித்துள்ளார்.

 நாங்கள் பௌத்தர் என்றவகையில் பௌத்த தர்மத்தை பாதுகாக்க வேண்டும். அத்துடன் எமது நாடு சர்வதேசத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாடாக இன்று மாறியுள்ளது. நாங்கள் பாடசாலைக்கு செல்லும் காலத்தில் நான் விளையாடிய அணியில் உப தலைவர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு முஸ்லிம் சகோதரர். நாங்கள் ஒன்றாக படித்தோம் விளையாடினோம் அதேபோன்று ஒன்றாக பழகினோம்.

என்றாலும் fடந்த காலத்தில் இனங்களுக்கிடையில் மதங்களுக்கிடையில் குரோதங்கள் ஏற்பட்டிருந்ததை நாங்கள் கண்டோம். ஆனால் இன்று அந்த குரோதங்கள் அனைத்தும் இல்லாமலாக்கப்பட்டுள்ளன.  இதுதொடர்பாக பாரியதொரு எதிர்பார்ப்புடன் செயற்பட்டுவருகின்றோம். 

அத்துடன் நாங்கள் விளையாடிய காலப்பகுதியில் தமிழ், முஸ்லிம் வீர்ரகளும் இருந்தனர். அப்போது எங்களுக்கிடையில் நல்லதொரு உறவு இருந்தது. அதேபோன்று நல்லிணக்கம் இருந்தது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04